Amazon Kickstarter Deals: அடிமட்ட விலையில் கிடைக்கும் உச்ச விலை ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்!
அமேசான் தனது வருடாந்திர பண்டிகை கால விற்பனையை விரைவில் அறிவிக்க இருக்கிறது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிறுவனமானது கிக் ஸ்டார்ட்டர் டீல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

10% உடனடி தள்ளுபடி
பண்டிகை தின விற்பனை அறிவிப்பின் முன்னோட்டமாக இந்த அறிவிப்பு பார்க்கப்பட்டாலும் பல கேட்ஜெட்களுக்கு அதீத தள்ளுபடிகள் இந்த அறிவிப்பில் வழங்கப்படுகின்றன.
இந்த விற்பனையில் SBI கார்டு பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பல கேட்ஜெட்களும் தள்ளுபடி விலையில்
அமேசான் கிக்ஸ்டார்ட்டர் விற்பனை 2022 இல் iQoo, Oppo, Realme உள்ளிட்ட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதனுடன் ஸ்மார்ட்டிவிகள், ஸ்மார்ட் வாட்ச்கள், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்கள் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அமேசான் கிக்ஸ்டார்ட்டர் விற்பனையின் சிறந்த டீல்கள்
இந்த கிக்ஸ்டார்ட்டர் டீல்களில் எஸ்பிஐ கார்ட் வைத்திருப்பவர்களுக்கு உடனடி 10% தள்ளுபடியை அமேசான் வழங்குகிறது.
அமேசான் கிக்ஸ்டார்ட்டர் விற்பனையின் சிறந்த டீல்களை பார்க்கலாம்.

OnePlus 9 Pro
நிர்ணய விலை: ரூ.69,999
தள்ளுபடி விலை: ரூ.54,999
OnePlus 9 Pro ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.69,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.7 இன்ச் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
ஹேசல்ப்ளாட் ஆதரவுடன் கூடிய 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

iQoo 9
நிர்ணய விலை: ரூ.49,990
தள்ளுபடி விலை: ரூ.39,990
iQoo 9, இடை நிலை பிரிவு ஸ்மார்ட்போனாகும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
6.56 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. iQoo 9 ஆனது 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.
4,700mAh பேட்டரி ஆதரவுடன் கூடிய 120W FlashCharge ஆதரவு இதில் இருக்கிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Hisense 65-இன்ச் 4K QLED ஆண்ட்ராய்டு டிவி
நிர்ணய விலை: ரூ.1,09,990
தள்ளுபடி விலை: ரூ.67,990
சிறந்த தரத்துடன் கூடிய பெரிய ஸ்மார்ட்டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.
காரணம் ரூ.1 லட்சம் விலைப் பிரிவில் விற்பனை செய்த ஸ்மார்ட்டிவி தற்போது ரூ.60,000 விலைப்பிரிவில் கிடைக்கிறது.
Hisense வழங்கும் இந்த 65-இன்ச் QLED ஆண்ட்ராய்டு டிவி ஆனது 4K தரத்துடன் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது.
சரவுண்ட் ஒலியை வழங்கக்கூடிய டால்பி அட்மோஸ் ஆதரவு இதில் இருக்கிறது.
இதில் உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவு இருக்கிறது.

Mi LED TV 4C (43 இன்ச்)
நிர்ணய விலை: ரூ.34,999
தள்ளுபடி விலை: ரூ.21,999
Mi LED TV 4C ஸ்மார்ட்டிவி ஆனது 60Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய முழு-HD ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இதில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் மற்றும் Patchwall 4 உடன் ஆண்ட்ராய்டு 9 ஆதரவைக் கொண்டிருக்கிறது.
DTS-HD தொழில்நுட்பத்துடன் கூடிய 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
Prime Video, Netflix, YouTube உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்களின் ஆதரவுகள் வழங்கப்படுகிறது.

Crossbeats Torq TWS Earphones
நிர்ணய விலை: ரூ.11,999
தள்ளுபடி விலை: ரூ.4,299
அமேசானில் இந்த TWS இயர்போன்களுக்கு 64 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கிராஸ்பீட்ஸ் டார்க் TWS இயர்போன்கள் 2,000mAh கேஸ் உடன் கிடைக்கிறது. 3 நாட்கள் வரை இதன் பேட்டரி ஆயுள் நீடிக்கும்.
இந்த இயர்பட்களில் தெளிவான குரல் வெளியீட்டிற்கு என இரண்டு மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயர்பட்களை அமேசானில் ரூ.4,299 என வாங்கலாம்.


Click it and Unblock the Notifications