உஷார்.. "அமேசானில் வேலை, வீட்டில் இருந்தே வருமானம்" லீலைகளை தொடங்கிய மோசடி கும்பல்!

|

Amazon நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடம் ரூ.3.15 லட்சம் இழந்ததாக 20 வயது பெண் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடந்தது என்ன என்றும் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடம் பெண் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்துள்ளனர். வேலை வழங்குவதாக கூறி மோசடி செய்வதற்கு என இந்த கும்பல் போலியான அமேசான் இணையதளத்தையே உருவாக்கி இருக்கிறது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களில் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோசடியில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோர்

மோசடியில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோர்

ஆன்லைன் வேலை மோசடிகள் தொடர்பான பல வழக்குகள் சைபர் கிரைம் இல் பதிவாகி வருகிறது. அதில் தற்போது இணைந்திருக்கிறது அமேசான் வேலை மோசடி. இந்த மோசடியில் பெண் ஒருவர் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார். இந்த மோசடியில் கடந்த 5 மாதங்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.

ரூ.3.15 லட்சம் இழந்த பெண்

ரூ.3.15 லட்சம் இழந்த பெண்

20 வயது பெண் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறிய மோசடியில் சிக்கி ரூ.3.15 லட்சத்தை இழந்ததாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலை பார்க்கலாம், அந்த பெண்ணுக்கு சர்வதேச எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது, அந்த லிங்கில் தன்னை அமேசான் நிர்வாகியாகக் காட்டி கொண்ட நபர் ஒருவர் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் தொடர்பு விவரங்கள் naukri.com மற்றும் Shine.com போன்ற தளங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலியான அமேசான் இணையதளம்

போலியான அமேசான் இணையதளம்

மென்பொருள் உருவாக்குநர்களின் உதவியுடன் மோசடி செய்பவர்களால் போலியான அமேசான் இணையதளம் உருவாக்கப்பட்டு பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மோசடியில் பலருக்கு போலியாக வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லட்சக் கணக்கில் மோசடி

லட்சக் கணக்கில் மோசடி

போலியாக வேலையை உருவாக்கி அதில் ஒரு virtual wallet உருவாக்கப்படுகிறது. இந்த வாலட்டில் பணம் செலுத்தும்படி கேட்கப்படுகிறது. பின் இந்த வாலட் இல் இருக்கும் அனைத்து பணமும் திருடப்படுகிறது. இந்த வேலை தொடர்பாக நடத்தப்படும் பல மோசடியில் இதுவும் ஒரு வழிமுறை ஆகும். பயனர்களிடம் இருந்து ஏமாற்றப்படும் பணம் அனைத்தும் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றபடுகிறது. இதுதொடர்பாக டெல்லி போலீஸ் குழுவால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வேலை மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?

ஆன்லைன் வேலை மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?

ஒரு பணிக்கான செயல்முறை என்பது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்திருப்பது மிக அவசியம். அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்சார்ந்த முறையில் ஒரு செய்தியை அனுப்பவோ அல்லது வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்யும்படி கேட்கவோ மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனங்களில் நேர்காணல்களை மேற்கொள்வதற்கு பல சுற்றுகள் இருக்கிறது. நிறைய விஷயங்களுக்கு HR உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஏதேனும் வேலை வாய்ப்பு குறித்த சந்தேகம் ஏற்பட்டால், அதை உங்களுக்கு நம்பும்படியான நபர்களுடன் பகிர்ந்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

விவரங்களை சரிபார்ப்பது மிக அவசியம்

விவரங்களை சரிபார்ப்பது மிக அவசியம்

பணிக்கான செயல்முறை மொத்தமும் மின்னஞ்சல் மூலமாகவே சரிபார்க்கப்படுகிறது. குரலழைப்பு, வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் முக்கியமான தகவல்கள் பகிரப்படமாட்டாது.

எந்த ஒரு நிறுவனமும் நேரடியாக பணியமர்த்துவதற்கு என பணம் கேட்காது. வேலை வாய்ப்புக்கு என பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். நேர்காணல் என்பது முறையாக நடைபெற்று அடுத்தடுத்த வழிமுறைகள் சரியாக நடைபெறும்.

கூறப்படும் ஊதியத்திற்கு நீங்கள் தகுதியானவரா?

கூறப்படும் ஊதியத்திற்கு நீங்கள் தகுதியானவரா?

இதைவிட குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த வேலைக்கான அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா, அங்கு உண்மையில் வேலை வாய்ப்பு இருக்கிறதா, அவர்கள் கொடுப்பதாக கூறப்படும் ஊதியத்திற்கு நீங்கள் தகுதியானவரா என்பதை உங்களை நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Job Scam: Woman Lost Over 3 Lakh, More than 100 People have been Cheated within Five Months.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X