Home
News

அட இது புதுசா இருக்கே! Amazon அறிமுகம் செய்துள்ள 5th Gear ஸ்டோர்.. 5ஜி போன்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!

5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமான தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்கும் நோக்கத்தின் கீழ், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது 5த் கியர் (5th Gear) என்கிற ஒரு பிரத்யேக 5ஜி ஸ்டோரை (5G store) அறிமுகம் செய்துள்ளது.

அமேசானின் புதிய 5த் கியர் ஸ்டோரின் கீழ் நீங்கள் வாங்கும் 5ஜி போன்களுக்கு ரூ.14,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer), 12 மாதங்களுக்கு அல்லது 1 வருடத்திற்கு இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (Amazon Prime Membership) மற்றும் 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) போன்ற சலுகைகள் கிடைக்கும்.

Amazon-ன் 5th Gear ஸ்டோர்.. 5ஜி போன்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!

Amazon 5th Gear ஸ்டோரின் கீழ் என்னென்ன போன்களுக்கு சலுகைகள் கிடைக்கும்?

அமேசானின் இந்த பிரத்யேக 5ஜி ஸ்டோரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G), ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G), சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி Samsung Galaxy S23 Ultra 5G) உட்பட ரியல்மி நார்சோ 50 5ஜி (Realme Narzo 50 5G), லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G), ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G) என பல வகையான 5ஜி போன்கள் ஆஃபர் விலையில் வாங்க கிடைக்கும்.

OnePlus 11R 5G மீதான சலுகைகள்

ஒன்பிளஸின் லேட்டஸ்ட் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி-ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் ரூ.1,500 வரை தள்ளுபடி போன்ற சலுகைகள் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.39,999.

Samsung Galaxy S23 Ultra 5G மீதான சலுகைகள்

சாம்சங்கின் 2023 பிரீமியம் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி மீது ரூ.14,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், எச்டிஎப்சி கார்டு மூலம் பணம் செலுத்தும் போது ரூ.8,000 உடனடி தள்ளுபடி மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் போன்ற சலுகைகள் அணுக கிடைக்கும். இந்த போனின் ஆரம்ப விலை ரூ.1,24,999.

OnePlus 11 5G மீதான சலுகைகள்

அமேசானின் 5த் கியர் ஸ்டோரில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பெற நீங்கள் உங்களுடைய பழைய 4ஜி போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும். கூடுதலாக 12 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் அணுக கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.56,999.

Realme Narzo 50 5G மீதான சலுகைகள்

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது விலைக்குறைப்பை பெற்று ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 48எம்பி மெயின் கேமரா, 90ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

Lava Blaze 5G மீதான சலுகைகள்

லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசானின் 5வது கியர் ஸ்டோரில் ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும். நாட்டிலேயே மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் இந்த 5ஜி போனில் 4ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.

வேறு என்னென்ன 5G போன்கள் மீது ஆஃபர் கிடைக்கிறது?

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அமேசானின் 5த் கியர் ஸ்டோர் வழியாக ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G), டெக்னோ ஃபாண்டம் எக்ஸ்2 5ஜி (Tecno Phantom X2 5G), ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G), ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G), ஒப்போ ஏ 78 5ஜி (OPPO A78 5G) மற்றும் பல மாடல்கள் மீதும் பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon India launched 5th Gear A New Dedicated 5G Store Check Best deals and Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X