இந்தியா முழுவதும் 50000 பேருக்கு வேலை வாய்ப்பு: Amazon அதிரடி அறிவிப்பு!

|

இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அமேசான் அறிவித்துள்ளது. அமேசான் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் 212 நாடுகளில் தாக்கம்

உலகின் 212 நாடுகளில் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலகின் 212 நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு

பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு

கொரோனா தடுப்பதின் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சி, வேலையாப்பின்மை என பல இன்னல்களை உலக நாடுகள் சந்தித்து வருகிறது.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

இந்தியாவில் மொத்தம் 125101 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மொத்தம் 125101 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடத்தில் அதற்கேற்ப ஊரடங்கில் இருந்து தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டாய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம்

1600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம்

சொமேட்டோ தனது பணியாளர்களில் 13 சதவீதம் அதாவது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஸ்விகி நிறுவனமும் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது.

உணவு டெலிவரி சேவையை தொடங்கிய அமேசான்

உணவு டெலிவரி சேவையை தொடங்கிய அமேசான்

ஸ்விக்கி, சொமேட்டோ பின்னடைவை சந்தித்து வரும் நேரத்தில் அமேசான் அதிரடியாக உணவு டெலிவரி சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. அமேசான் நிறுவன அறிவிப்புப்படி முதற்கட்டமாக பெங்களூருவில் வொயிட்பீல்ட், மகாதேவபுரம் என குறிப்பிட்ட 4 பகுதிகளில் உணவு டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக இந்தியா முழுவதும் அமல்

படிப்படியாக இந்தியா முழுவதும் அமல்

இந்த சேவையானது முதற்கட்டமாக 100 ஓட்டல்களுடன் இணைந்து அமல் படுத்தப்பட்டிருக்கிறது. படிப்படியாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான்

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான்

இதையடுத்து ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக ஊழியர்கள் மூலம் ஆன்லைன் சந்தையில் சப்ளை தொடர் ஊழியர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருட்களை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் தற்காலிக அல்லது பருவகால ஊழியர்களாக இருப்பார்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா

இந்த அறிவிப்பு குறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா கூறுகையில், இந்த கடுமையான நேரத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலல் 50 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Amazon India is looking to hire 50,000 for pack, ship, delivery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X