சீக்கிய மத உணர்வுகளை 'துன்புறுத்துவதாக' அமேசான் மீது எஃப்.ஐ.ஆர்!

|

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீக்கிய மத உணர்வுகளை 'துன்புறுத்துவதாக' கூறி அமேசான் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் விற்பனை

1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் விற்பனை

ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் வலைத்தளத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்குத் தேவைப்படும் பொருட்களிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், ஆடைகள், பர்னிச்சர், ஆர்கானிக் விதைகள், மாட்டின் சாணம் போன்ற அனைத்து பொருட்களையும் அமேசான் விற்பனை செய்து வருகிறது.

பாத்ரூம் மேட்டினால் சர்ச்சை

பாத்ரூம் மேட்டினால் சர்ச்சை

சீக்கிய மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்றான தங்க கோவிலின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட பாத்ரூம் மேட்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை கண்ட சிர்சா தனது டிவிட்டர் பக்கத்தில், தங்க கோயிலின் படங்களுடன் அச்சிடப்பட்ட பாத்ரூம் மேட்டின் படங்களைப் பதிவிட்டு அமேசான் நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்!ஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்!

உலகளாவிய மன்னிப்பு கேட்க வேண்டும்

உலகளாவிய மன்னிப்பு கேட்க வேண்டும்

"அமேசான் 'சீக்கிய உணர்வுகளுக்குப் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது' என்று சிர்சா ட்வீட் செய்துள்ளார். இந்த மேட்களை விற்பனை செய்யும் விற்பனையாளரைத் தடை செய்யுமாறு இ-காமர்ஸ் நிறுவனத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் அமேசான் நிறுவனமா உலகளாவிய மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டணத்தை உயர்த்தியாச்சு., அடுத்த கட்டம் என்ன தெரியுமா?- ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே..!கட்டணத்தை உயர்த்தியாச்சு., அடுத்த கட்டம் என்ன தெரியுமா?- ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே..!

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

அமேசான் நிறுவனம் இந்த மாதிரியான பிரச்சினையில் சர்ச்சையைத் தீர்ப்பது இதுவே முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் பல முறை இது போன்ற சிக்கலில் சிக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று 2018ம் ஆண்டிலும் சீக்கிய மத வழிபாடு தளங்களின் உருவத்தைக் கால்மிதியாக விற்பனை செய்ததற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Amazon India Hit by FIR for 'Hurting' Sikh Religious Sentiment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X