Amazon வந்துட்டான்யா.. இந்த மாச சம்பளத்தை எடுத்து தனியா வைங்க.. கூல்-கூல் சம்மர் சேல்ஸ் ரெடி.. எப்போது?
உங்க வீட்டுக்கு புதுசா ஏதாச்சும் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் (Electronic device) அல்லது புது கேட்ஜெட்ஸ் (Gadgets) அல்லது புது ஸ்மார்ட் டிவி (Smart TV), பிரிட்ஜ் (Fridge), வாஷிங்-மெஷின் (Washing Machine), மொபைல் (Mobile) என்று ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டியதுள்ளதா?
அப்படியானால், உங்கள் அடுத்த மாத சம்பளத்தில் ஒரு தொகையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024) பற்றிய அறிவிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த விற்பனையில் அணைத்து விதமான பொருட்களும் நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கவுள்ளதனால், இந்த சிறப்பு விற்பனையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024):
அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024) சிறப்பு விற்பனை வரும் மே 2, 2024 ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்கவிருக்கிறது என்று அமேசான் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையில் சிறப்பு சலுகை மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அமேசான் விளம்பரம் செய்துள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் உடனடி சலுகை கிடைக்கும்.
வழக்கம் போல், அமேசான் பிரைம் மெம்பர்ஸ்களுக்கு (Amazon Prime Members) ஒரு நாள் முன்பு இந்த அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 விற்பனையை அணுக அனுமதி வழங்கப்படும். வரும் மே 2 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 விற்பனை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை பற்றிய முழு தகவலை இப்போது பார்க்கலாம்.
இதற்கிடையில், அமேசான் பிரைம் பயனர்கள் மே 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் பொருட்களை வாங்கலாம் என்று அமேசான் அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி (ICICI bank), பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) மற்றும் ஒரு கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடிகள் வழங்கப்படும். பிற்பகுதியில் கூடுதல் வங்கிகள் சேர்க்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூல்-கூல் சம்மர் சேல்ஸ் ரெடி.. அதிரடி தள்ளுபடி:
இந்த சிறப்பு விற்பனையில் என்னென்ன சாதனங்கள் தள்ளுபடியில் கிடைக்கும் என்று பார்க்கலாம். இது ரியல்மி நர்ஸோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60x 5G), ஐகியூஓஓ இஜட்9 5ஜி (iQOO Z9 5G) மற்றும் ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போன்களில் சிறப்பான தள்ளுபடிகள் பொருந்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் எச்டி ஸ்மார்ட் ரெடி டிவி ரூ.14,490 விலைக்கு வாங்க கிடைக்கும்.
சியோமி எம்ஐ 32 எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (Xiaomi Mi 32 Inch Ready Smart TV) ரூ.12,999 விலைக்கும் கிடைக்கும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அமேசான் இந்தியா கிரேட் சம்மர் சேல்ஸ் விற்பனை மக்களை குளிர்விக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உற்சாகமான டீல்கள் மூலம் உங்களை லூப்பில் வைத்திருப்போம். ஒப்பந்தங்களுக்கு இணைந்திருங்கள். வெப்பத்தைத் தணிக்க பிரிட்ஜ் மற்றும் ஏசிகள் மீது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications