Home
News

யார்றா நீ.. பால் கோவா, நெய் லட்டு-ஆ.. Amazon-ல் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில், ஸ்ரீ ராம் மந்திர் அயோத்யா பிரசாத் (Sri Ram Mandir Ayodhya Prasad) என்கிற பெயரின் கீழ்.. அதாவது அயோத்தி ராமர் கோவிலின் பிரசாதம் என்கிற பெயரின்கீழ் சில இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான உரிமைகோரல் (Misleading claims) என்று கூறி அமேசான் செல்லர் சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடெட் (Amazon Seller Services Pvt Ltd) மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority - CCPA) நடவடிக்கை எடுத்துள்ளது.

Amazon-ல் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

இன்று (ஜனவரி 22 ஆம் தேதி) கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ள அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் (Ayodhya Ram Temple) பிரசாதம் என்ற "போர்வையில்" அமேசான் வலைத்தளமானது "சம்பந்தம் இல்லாத" இனிப்புகளை விற்பனை செய்வதில், ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடுவதாக கூறி, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமேசான் வலைத்தளமானது ராமர் கோவில் பிரசாத விற்பனை விருப்பங்களை (Sales Option) நீக்கியுள்ளது மற்றும் சம்பந்தம் இல்லாத பெயரில் இனிப்புகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளது.

Amazon-ல் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

"சில விற்பனையாளர்(கள்) மூலம் தவறான தயாரிப்பு உரிமைகோரல்கள் மற்றும் மீறல்களுக்காக அவர்களை விசாரிப்பது தொடர்பாக சிசிபிஏ-விடம் இருந்து தகவல் பெற்றுள்ளோம். இடைக்காலத்தில், எங்கள் கொள்கைகளின்படி அத்தகைய பட்டியல்களுக்கு எதிராக நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்" என்று அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சிசிடிஏ-வின் கூற்றுப்படி, அமேசானில் "ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்" என்கிற பெயரின் கீழ் பல்வேறு இனிப்புகள் / உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது முற்றிலும் தவறான பிரதிநிதித்துவங்கள் என்பதால், இது ஆன்லைன் உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களை தவறாக வழிநடத்தும் என்பதால் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Amazon-ல் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

"ஸ்ரீ ராம் மந்திர் அயோத்யா பிரசாத்" என்கிற பெயரின்கீழ் அமேசான் வழியாக விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருந்த தயாரிப்பு விவரங்கள்: ஸ்ரீ ராம் மந்திர் அயோத்யா பிரசாத் - ரகுபதி நெய் லடூ, அயோத்யா ராம் மந்திர் அயோத்யா பிரசாத், கோயா கோபி லடூ, ராம் மந்திர் அயோத்யா பிரசாத் - தேசி கவ் மில்க் பேடா (பால் கோவா).

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon India Got Notice For Selling Misleading Ayodhya Ram Temple Prasad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X