மாஸ் காட்டும் அமேசான்: அதிரடி அறிவிப்பால் இன்ப வெள்ளத்தில் இந்திய ஊழியர்கள்!

|

கொரோனா பரவலின் காரணமாக உத்திரவாதம் இல்லா வேலை, சம்பள நிறுத்தம் என்ற பல சிக்கலை சில நிறுவனங்களின் ஊழியர்கள் சந்தித்து வரும் நிலையில் அமேசான் தங்களது ஊழியர்களுக்கு சிறப்பு அங்கீகார போனஸ் அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்கள்

உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்கள்

கொரோனா பரவல் உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக உயர்ந்த பதவியில் பணியாற்றியவர் கூட திடீரென வேலை இல்லாமல் போன நிலை ஏற்பட்டது. சம்பள குறைப்பு, நிறுத்தம் என பல சிக்கல் ஏற்பட்டது.

ஆன்லைன் ஆர்டர் அதிகரிப்பு

ஆன்லைன் ஆர்டர் அதிகரிப்பு

இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியில் சென்று பொருட்களை வாங்க அச்சம் கொண்டனர். இதன்காரணமாக ஏராளமானோர் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யத் தொடங்கினர். ஆன்லைன் ஆர்டர் அதிகரிக்கத் தொடங்கி டெலிவரி செய்ய ஊழியர்கள் தேவையும் அதிகரித்தது.

ஆன்லைன் விற்பனை தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்கள்

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களும் பண்டிகை தின விற்பனையை அறிவித்து சலுகைகளை வாரி வழங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

அமேசான் சிறப்பு அங்கீகார போனஸ்

அமேசான் சிறப்பு அங்கீகார போனஸ்

இந்த நிலையில் அமேசான் இந்தியா ஊழியர்களுக்கு சிறப்பு அங்கீகார போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமேசான் பெரிய லாபம் ஈட்டியதாக குற்றம் சாட்டி #MakeAmazonPay என்ற உலகளாவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அமேசான் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்?- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு!ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்?- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு!

ஊழியர்களுக்கு ரூ.6,300 வரை போனஸ்

ஊழியர்களுக்கு ரூ.6,300 வரை போனஸ்

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை பணி புரிந்த முழுநேர ஊழியர்களுக்கு ரூ.6,300 எனவும் பகுதிநேர ஊழியர்களுக்கு ரூ.3,150 எனவும் போனஸூக்கு தகுதி பெற்றவர்கள் என அமேசான் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.

#MakeAmazonPay என்ற ஹேஸ்டேக்

#MakeAmazonPay என்ற ஹேஸ்டேக்

இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு அமேசான் சிறப்பு அங்கீகார போனஸாக இதை அறிவித்துள்ளது. இதேபோல் மற்ற நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. #MakeAmazonPay என்ற உலகளாவிய ஹேஸ்டேக் பிரச்சாரத்திற்கு மத்தியில் அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு அங்கீகார போனஸ் அறிவிப்பு

சிறப்பு அங்கீகார போனஸ் அறிவிப்பு

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அமேசானில் பணி புரிந்த இந்தியா ஊழியர்களுக்கு முழு நேரம் மற்றும் பகுதிநேரம் என்ற அடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர ஊழியர்களுக்கு ரூ.6,300 எனவும் பகுதிநேர ஊழியர்களுக்கு ரூ.3,150 எனவும் சிறப்பு அங்கீகார போனஸ் வழங்கப்பட உள்ளது.

அங்கீகார போனஸ் மூலம் பாராட்டு

அங்கீகார போனஸ் மூலம் பாராட்டு

நிறுவனத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் எங்கள் அணிக்கு நன்றியுணர்வோடு நிறுவனம் இருக்கும் எனவும் இந்தியாவில் பண்டிகை காலத்தின் செயல்பாட்டின் காரணமாக சிறப்பு அங்கீகார போனஸ் மூலம் பாராட்டுகளை பகிர்ந்து கொள்வதாகவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

கூடுதல் ஊதியத்துக்கு முதலீடு

கூடுதல் ஊதியத்துக்கு முதலீடு

இந்த காலாண்டில் மட்டும் முழுநேர ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியத்தில் 750 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சிறப்பு போனஸ் மற்றும் சலுகைகளுக்காக 2020 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

source: livemint.com

Best Mobiles in India

English summary
Amazon India Announced Special Recognition Bonus to Employees

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X