கடுப்பில் அமேசான் டெலிவரி ஊழியர்கள்: ரூ.10 ஆக குறைந்த டெலிவரி சார்ஜ்.. விரைவில் போராட்டம்..

|

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான அமேசான் இன்க் நிறுவனம்., சமீபத்தில் அதன் விநியோக சேவை அதிகாரிகளின் ஊதியத்தைக் குறைத்துள்ளது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமேசான் சேவை வாகன ஓட்டுநர்கள் இப்போது நிறுவனத்திற்கு எதிராக 24 மணி நேர போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். உலகத்தின் முதல் பணக்காரர் என்று அழைக்கப்படும் ஜெப் பெசோஸின் நிறுவனத்தில் இருந்து எதற்காக இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

அமேசான் டெலிவெரி அதிகாரிகள் கடுப்பு

அமேசான் டெலிவெரி அதிகாரிகள் கடுப்பு

முன்னதாக, ஒவ்வொரு விநியோகத்திலும், இந்த ஓட்டுநர்கள் சுமார் 48 அமெரிக்க சென்ட்களை பெற்று வந்துள்ளார். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ .35 ஆகும். இந்த தொகையை ஒவ்வொரு விநியோகத்துடன் அமேசான் டெலிவெரி அதிகாரிகள் சம்பாதித்தனர். ஆனால் மார்ச் 15 முதல், ஒரு புதிய பாலிசியை நிறுவனம் அறிமுகப்படுத்திய பின், ஒவ்வொரு டெலிவரிக்கும் வருவாய் விகிதங்கள் சிறிய பார்சல்களுக்கு 14 சென்ட்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது ரூ. 10 ஆகும்.

டெலிவரி சார்ஜிங் கட்டண விபரம்

டெலிவரி சார்ஜிங் கட்டண விபரம்

டெலிவரி நபர் மோட்டார் ரிக்‌ஷாவைப் பயன்படுத்தினால் 21 சென்ட்கள் என்றும் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ .15 ஆகும். இந்த தொகையைச் சாதாரண டெலிவரிக்கு 28 சென்ட் (ரூ .20) ஆகவும், டெலிவரி நபர் ஒரு பெரிய வாகனத்தைப் பயன்படுத்தினால் 1.10 டாலர் (ரூ .80) ஆகவும் அமேசான் நிறுவனத்தைப் பயன்பாட்டு அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (IFAT) எதிர்பார்க்கிறது.

அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!

24 மணி நேர வேலை நிறுத்தம்

24 மணி நேர வேலை நிறுத்தம்

அமேசானுக்கு எதிரான 24 மணி நேர வேலை நிறுத்தம் விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அறிக்கையின்படி, அமேசானுக்கு எதிரான போராட்டம் விரைவில் வரவிருப்பதை IFAT உறுதிப்படுத்தியுள்ளது. தேதிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய போராட்டம்

அமேசானுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் முதல் நாடு தழுவிய போராட்டம் இதுவாகும். அமேசான் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற நேரத்தில் அவர்கள் தங்கள் ஓட்டுநர்களின் சம்பளத்தை இவ்வளவு கடுமையான முறையில் குறைக்க தேவையில்லை. நகரத்தின் சில பகுதிகளில் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படும் போராட்டங்களுக்கு புனே ஏற்கனவே ஒரு சுருக்கமான உதாரணத்தைக் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனை மங்க வைக்க பில் கேட்ஸின் விசித்திரமான திட்டம்.. எதுக்கு இந்த விபரீத முடிவு தெரியுமா?சூரியனை மங்க வைக்க பில் கேட்ஸின் விசித்திரமான திட்டம்.. எதுக்கு இந்த விபரீத முடிவு தெரியுமா?

நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்

நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்

பிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஓட்டுநர்களுக்கு மாதத்திற்குக் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தொடங்கியுள்ளன. அமேசானில் இருந்து செலுத்த வேண்டிய டெலிவரி மாடல் பழையதாகிவிட்டது, இ-காமர்ஸ் நிறுவனமான இந்த விஷயத்தை விரைவில் கவனிக்கவில்லை என்றால், அது வரும் நாட்களில் மோசமான அழுத்தத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசானுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது இருக்கும், அது நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Inc Cuts Pay of Delivery People to Rs 10 and Protest Is On Its Way : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X