Home
News

ரூ.99 க்கு ஆக்சஸெரீஸ், ரூ.5490 க்கு ஸ்மார்ட்போன், ரூ.12999 க்கு 4K TV.. அனல் பறக்கும் Amazon சம்மர் சேல்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது மே 1 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. எப்போது முடிவடையும் என்கிற தேதியை குறிப்பிடாமலேயே தொடங்குவதால், இது நிச்சயம் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு முன்கூட்டிய அணுகல் கிடைக்கும். அதாவது அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் கீழ் உள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ப்ரைம் மெம்பர்களால் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே பெற முடியும்.

ரூ.5490 க்கு ஸ்மார்ட்போன்.. அனல் பறக்கும் Amazon சம்மர் சேல்!

அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற இந்த சிறப்பு கோடைகால விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சமையலறை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உபகரணங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பல போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் உள்ள பல வகையான தயாரிப்புகளின் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகளை வழங்கும்.

ஆபர்களை அள்ளி வழங்குவதில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ், ஷாவ்மீ, ஹெச்பி, ஹேயர், எல்ஜி, ஹேவல்ஸ், பிரெஸ்டீஜ் மற்றும் போட் போன்ற முன்னணி பிராண்டுகள் இந்த விற்பனையில் முன்னிலை வகிக்கும். எப்போதும் போல் இந்த அமேசான் விற்பனையும் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் மீது முக்கிய கவனம் செலுத்தும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (ரூ. 84,999 இல் தொடங்குகிறது), ஐபோன் 15 (ரூ.57,749), ஒன்பிளஸ் 13ஆர் (ரூ.39,999) மற்றும் ரியல்மி நர்சோ 80எக்ஸ் 5ஜி (ரூ.11,999) ஆகிய மாடல்களில் சலுகைகள் இருக்கும். மேலும் டெக்னோ பாப் 9 (ரூ.5,490) போன்றஎன்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கும். சுவாரசியமாக ரூ.99 முதல் மொபைல் அக்ஸசெரீஸ்கள் வாங்க கிடைக்கும்,

மேலும் வாடிக்கையாளர்கள் அனைத்து பிரிவுகளிலும் 80% வரை தள்ளுபடி பெறலாம், இதில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்ஸசெரீஸ்களுக்கு 75% வரை தள்ளுபடியும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 60% தள்ளுபடியும், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு 70% தள்ளுபடியும் கிடைக்கும். சாம்சங், சோனி மற்றும் டிசிஎல் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடி கிடைக்கும்; 4கே டிவி மாடல்கள் வெறும் ரூ.12,999 முதல் தொடங்கும்.

வங்கி சலுகைகள் மற்றும் அமேசான் பே ஆபர்களை பொறுத்தவரை, எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடி மற்றும் எளிமையான இஎம்ஐ விருப்பங்களை பெறலாம். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 5% அன்லிமிடெட் கேஷ்பேக் மற்றும் ரூ.2,500 மதிப்புள்ள வெல்கம் ரிவார்ட்ஸ் கிடைக்கும். மேலும் அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later) வழியாக ரூ.60,000 வரை இன்ஸ்டன்ட் கிரெடிட் மற்றும் ரூ.600 வரை கேஷ்பேக் கிடைக்கும். தங்கள் அமேசான் பே வாலட்டில் (Amazon Pay Wallet) ரூ.1,000-ஐ ஏற்றும் பயனர்கள் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம்.

சரியாக என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்கிற விவரங்கள்: ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.54,999 க்கு பதிலாக ரூ.32,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 lite 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,249 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale Mobile Smart TV Electronics gets Big Discounts Starting From May 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X