இதுவரை இல்லாத ஆஃபர் விலையில் டிவி, ஸ்மார்ட்போன்கள்.. Amazon Great Summer Sale.. எப்போது தொடங்கும்?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 எனும் சிறப்பு விற்பனை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், டிவி, ஏசி, டேப்லெட், இயர்போன், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை தள்ளுபடியில் வாங்க முடியும்.
அமேசான் தளத்தில் வெளியான தகவலின்படி, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மே 2ம் தேதி மிட்நைட் முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 (Amazon Great Summer Sale 2024) எனும் சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் கிரேட் சம்மர் சேல் மூலம் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் தள்ளுபடியில் பெறமுடியும் என்று கூறப்படுகிறது. பின்பு ஸ்மார்ட் டிவி மாடல்களை 65 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும். டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். முன்னணி நிறுவனங்களின் ஏசி மாடல்களுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல் முன்னணி நிறுவனங்களின் லேப்டாப்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கு 55 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இயர்போன்களை ந்த சிறப்பு விற்பனையில் 75 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் சிறப்பு விற்பனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கண்டிப்பாக தள்ளுபடி வழங்கப்படும். தற்போது இந்த போன் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.15,999-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். MIUI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
அதேபோல் 108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLEDடிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி நோட் 13 5ஜி போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications