Home
News

ஏட்டிக்குப் போட்டி.. மே.4ல் தொடங்கும் Amazon Great Summer Sale.. Flipkart-ஐ விட பயங்கரமான ஆஃபர்கள் அறிவிப்பு!

வழக்கம் போல இம்முறையும், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய இரண்டு இகாமர்ஸ் தளங்களும் ஏட்டிக்கு போட்டியாக, தத்தம் சிறப்பு விற்பனைகளுக்கான (Special Sale) தேதிகளை அறிவித்து உள்ளன. பிளிப்கார்ட்டை தொடர்ந்து அமேசான் இந்தியாவும் தனது சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

முன்னதாக, பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனை (Flipkart Big Saving Days 2023 Sale) வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரையிலாக மொத்தம் 6 நாட்கள் நடக்குமென்று அறிவித்திருந்தது.

மே.4ல் தொடங்கும் Amazon Summer Sale.. பயங்கரமான ஆஃபர்கள் அறிவிப்பு!

தற்போது அமேசான் நிறுவனம் தனது கிரேட் சம்மர் சேல் 2023 (Great Summer Sale 2023) வருகிற மே 4 முதல் தொடங்குமென்று அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்பான சலுகைகள் (Best Deals) கிடைக்கும் என்கிற விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

அமேசானின் நேரடி தள்ளுபடிகள் மற்றும் டீல்களை தவிர்த்து 18 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள், ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% வரை தள்ளுபடி, புதிய அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு முதல் பர்சேஸில் 20% கேஷ்பேக் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

மேலும், முந்தைய அமேசான் விற்பனைகளை போலவே நீங்களொரு ப்ரைம் மெம்பராக (Prime Member) இருந்தால், அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023-க்கான அணுகலை 24 மணி நேரத்திற்கு முன்பாகவே பெறுவீர்கள். அதாவது மே 4 ஆம் தேதிக்கு முன்பே, முன்கூட்டிய அணுகலை (Early access) பெறுவீர்கள்.

எந்தெந்த போன்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும்? அமேசானின் கிரேட் சம்மர் 2023 விற்பனையின் போது சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus), ரியல்மி (Realme), சியோமி (Xiaomi), ஒப்போ (OPPO) மற்றும் லாவா (Lava) போன்ற பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும்.

இந்த சிறப்பு விற்பனையின் போது, ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆனது ரூ.71,999 க்கு கிடைக்குமென்று அமேசான் அறிவித்துள்ளது. மேலும் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) ஸ்மார்ட்போனானது வங்கி சலுகைகள் உட்பட ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G) மாடலானது இந்த விற்பனையின் போது அதன் அசல் விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கும். மேலும் ரூ.13,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQOO Z6 Lite 5G) ஸ்மார்ட்போனானது ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S20 FE 5G) ஸ்மார்ட்போனானது அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் போது அதன் அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மாடலானது ரூ.56,999 க்கு பதிலாக ரூ.55,999 க்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Summer Sale 2023 Starts On 4th May Best Deals on Mobiles Announced Including iPhone 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X