பொருட்களை அள்ளலாம்: 3 நாட்கள் உங்களோடது- தள்ளுபடி 80 சதவீதம் வரை- ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ!

|

இகாமர்ஸ் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி அமேசான் நிறுவனம் Great Republic Day Sale விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது ஜனவரி 20 முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அமேசான் Great Republic Day விற்பனை

அமேசான் Great Republic Day விற்பனை

அமேசான் Great Republic Day விற்பனையானது மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஜனவரி 20 முதல் ஜனவரி 23 ஆம் தேதிவரை இந்த விற்பனை நடைபெற இருக்கிறது. அதேபோல் அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் இந்த சலுகைதின விற்பனையை ஜனவரி 19 ஆம் தேதி முதலாகவே அனுபவிக்கத் தொடங்கலாம்.

முதல் மெகா ஷாப்பிங் விற்பனை

முதல் மெகா ஷாப்பிங் விற்பனை

அமேசான் இந்தாண்டின் முதல் மெகா ஷாப்பிங் விற்பனையை தொடங்க உள்ளது. பயனர்கள் எதிர்பார்க்கக்கூடிய சில ஒப்பந்தங்களை அமேசான் தளம் வெளிப்படுத்தியுள்ளது. சாதனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளோடு, வங்கி சலுகைகளும் அமேசான் அறிவித்துள்ளது.

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் இஎம்ஐ, பஜாஜ் பின்சர்வ் இஎம்ஐ கார்டு, அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் மற்றும் குறிப்பிட்ட டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள்

பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள்

ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் பியூட்டி சாதனங்கள், ஹோம் கிச்சன் சாதனங்கள் உட்பட கோடி தயாரிப்புகள் கிடைக்கின்றன. இவை அனைத்துக்கும் சலுகை தினத்தில் அறிவிக்கப்படும் தள்ளுபடிகளோடு குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் வைத்த கதை: "உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு"- இதை நோட் பண்ணிங்களா?

ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் கிடைக்கும் சிலவற்றை பார்க்கலாம். இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் அக்ஸசரிஸ்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், 18 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது.

ஐபோன் 12 மினி முதன்முறை விலைக்குறைப்பு

ஐபோன் 12 மினி முதன்முறை விலைக்குறைப்பு

புதிய ஐபோன் 12 மினி அறிமுகப்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக அமேசானில் விலைக்குறைப்பு கிடைக்கும் என அமேசான் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதன் தள்ளுபடி விலை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை.

ரூ.8000 வரை தள்ளுபடி

ரூ.8000 வரை தள்ளுபடி

அதேபோல் ரெட்மி நோட் 9 பவர், எம்ஐ 10 ஐ, சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் வங்கி சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம் 51-க்கு ரூ.8000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

18 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ

18 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ

ரெட்மி நோட் 9 பவர், மி 10 ஐ உட்பட இரண்டு புதிய தொலைபேசிகளை சியோமி இந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அமேசான் விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்கள் கூடுதல் வங்கி சலுகைகளுடன் கிடைக்கும். ஒன்பிளஸ் சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதேபோல் ஒன்பிளஸின் சில சாதனங்களுக்கு 18 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் கிடைக்கும்.

பவர் பேங்கிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி

பவர் பேங்கிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி

மேலும் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியும், ரூ.5000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவர் பேங்க்குகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும், ரூ.69 முதல் ஆரம்ப விலையில் மொபைல் பாகங்கள் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Republic Day Sale Begins From January 20 to January 23: 2021 First Mega Shopping Festival

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X