ஆர்டர் தூள் பறக்க போகுது.. Amazon Republic Day விற்பனை.. ஆஃபரில் டிவி, போன்கள், லேப்டாப்.!
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 (Amazon Great Republic Day sale 2024) எனும் சிறப்பு விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இதுகுறித்து டீசர் ஒன்றை அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 15-ம் தேதி தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி 15-ம் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமேசான் வெளியிட்டுள்ள டீசரில், ஐபோன் 13, ரெட்மி நோட் 12 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்23, ஒன்பிளஸ் 11 5ஜி, ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி, ஹானர் 90 5ஜி, மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ராஇ ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி உள்ளிட்ட போன்களுக்கு தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அமேசான் சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். பின்பு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களிலும் மொபைல்போன்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 எனும் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை 60 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்பி, டெல், அசுஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முயும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 மூலம் ஹெட்ஃபோன்களை 80 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார் டிவிகளை இந்த சிறப்பு விற்பனையில் 50 சதவீதம் தள்ளுபடியில் வாங்க முடியும். பின்பு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த அமேசான் சிறப்பு விற்பனை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் அமேசான் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ள ரெட்மி நோட் 12 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ரெட்மி நோட் 12 5ஜி அம்சங்கள்: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி மாடல்.
48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








