கிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.!
கிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.!
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைனில் ஏராளமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிரடியாக ஆப்பர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனையை அதிகரித்துக் கொள்கின்றது அமேசான்.

இந்நிலையில் கிரேட் இன்டியன் சேல் என்று தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் வரை எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்.
இந்த தள்ளுபடியானது வரும் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று துவக்கம்:
அமேசானின் கிரேட் இன்டியன் சேல் என்று இன்று துவங்குகின்றது. இதில் எலக்ட்ரானிக் பொருட்கள்
ஸ்மார்ட்போன்கள் வரை அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி:
இதில், ஹானர் 8சி, விவோ வி9, ஒன்பிளஸ் 6டி, ரெட்டிட் ஒய்2, ரியல்மி யு1, பயர் டிவி 1;டிக், ஹூவாய் நோவா 3ஐ, ஹெட்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தள்ளுபடி:
அமேசான் நிறுவனம் தயாரித்துள்ள அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ உள்ளிட்ட பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிகளுக்கும் தள்ளுபடி:
இதில் டிவி, வாசிங் மெசின்ஸ், ரெப்பிரிட்ஜ் ரெட்டர் உள்ளிட்ட ஹோம் அப்பளையன்ஸ் பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎப் வங்கி கார்டுக்கு 10% தள்ளுபடி:
ஹெச்டிஎப் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதலாக தள்ளுபடியும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் கேஷ்பேக்:
மேலும், அமோசனின் பே பேலன்ஸ் மூலம் 10 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications