அமேசான் கிரேட் இந்திய சேல் : நுபியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நுபியா இசெட்17மினி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்திய சேல் இந்த மாதம் 21 முதல் 24 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நுபியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நுபியா ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்த வருடம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
நுபியா என்1 லைட், நுபியா எம்2 லைட், நுபியா இசெட்17மினி, நுபியா என்2, நுபியா எம்2, நுபியா இசெட்17மினி அரோரா ப்ளூ போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் நுபியா ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நுபியா இசெட்17மினி:
நுபியா இசெட்17மினி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபியா இசெட்17மினி (அம்சங்கள்):
நுபியா இசெட்17மினி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நுபியா எம்2:
நுபியா இசெட்17மினி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும்.


நுபியா எம்2(அம்சங்கள்):
நுபியா எம்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நுபியா இசெட்17மினி அரோரா ப்ளூ :
நுபியா இசெட்17மினி அரோரா ப்ளூ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபியா என்2:
நுபியா என்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications