அமேசான் கிரேட் இந்தியன் சேல் இரண்டாம் நாளின் அதிரடி சலுகைகள்.!
அமேசான் கிரேட் இந்தியன் சேல் விற்பனையின் முதல் நாள் நேற்று முடிந்த கையேடு இரண்டாம் நாளான இன்று அமேசான் இந்தியா என்னென்ன அதிரடி சலுகைகளை வழங்குகிறது.?!
இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது கிரேட் இந்தியன் விற்பனை சலுகையை ஆரம்பித்தது. மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த விற்பனையின் முதல் நாள் நேற்று முடிந்த கையேடு இரண்டாம் நாளான இன்று அமேசான் இந்தியா என்னென்ன அதிரடி சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றிய தொகுப்பே இது
இரண்டாவது நாளான இன்று அமேசான் இந்தியா வலைத்தளம் மொபைல் போன்கள், டிஎஸ்எல்ஆர் கேமிரா, தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களுக்கு சலுகைகளை வழங்குகிறது உடன் ஸ்மார்ட்போன்களை பொருத்தமட்டில் மோட்டோ ஜி பிளஸ், லெனோவா இசெட்2 பிளஸ் (64ஜேபி) மற்றும் பல உடன் பிட்பிட் (Fitbit) உடற்பயிற்சி டிராக்கர்ஸ் ஆகியவைகளுக்கு விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்குகிறது.

மோட்டோ ஜி ப்ளே
தற்போது ரூ.8,999/- என்ற விலைக்கு கிடைக்கும் மோட்டோரோலா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி ப்ளே அக்கருவி இந்த விற்பனையில் ரூ.7,999/-க்கு கிடைக்கும். கருவியின் அம்சங்கள் : 5 இன்ச்எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 410 க்வாட்-கோர் செயலி, 16 ஜிபி உள்ளடக்க நினைவகம், 128 ஜிபி வரை விரிவாக்க வசதி, 2 ஜிபி ரேம், இரட்டை சிம் மற்றும் வோல்ட் ஆதரவு.

லெனோவா இசெட்2 பிளஸ் (64ஜிபி)
மிட்-ரேன்ஜ் கருவியான லெனோவா இசெட்2 பிளஸ் (64ஜிபி) கருவியில் ரூ.2,500/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.17,499/-க்கு விற்கப்படுகிறது. கருவியின் அம்சங்கள் : 5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடக்க மெமரி, எல்இடி ப்ளாஷ் மற்றும் பிடுஏஏப் (PDAF) கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா.

கூல்பேட் நோட் 5
செப்டம்பர் 2016 இல் தொடங்கப்பட்ட பல விதமான சலுகைகளில் கிடைக்கும் கூல்பேட் நோட் 5 அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையில் கூடுதலாக ரூ.1500/- தள்ளுபடி பெற்றுள்ளது. கருவியின் சிறம்பம்சங்கள் : 4010 எம்ஏஎச் பேட்டரி, ஆட்டோ ஃபோகஸ் மற்றும் முன்பக்க ப்ளாஷ் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 13எம்பி முதன்மை கேமரா.

ஒன்ப்ளஸ் 3டி (64ஜிபி)
ஒன்ப்ளஸ் 3டி (64ஜிபி) கருவியானது மிகவும் பரிந்துரைக்கப்படும் ஒரு 'தலைமை கருவியாகும்'. இக்கருவி அமேசான் கிரேட் விற்பனையில் கூடுதல் எக்ஸ்சேன்ஞ் பெற்று ரூ.29,999/-க்கு கிடைக்க வேண்டும். அமேசான் ஒரு புதிய ஒன்ப்ளஸ் 3டி கருவியை உங்கள் பழைய ஸ்மார்ட்னை பரிமாற்றி கூடுதலாக ரூ.2,000/- சலுகை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிட்பிட் சார்ஜ் 2
பிட்பிட் சார்ஜ் 2 என்பது ஒரு வயர்லெஸ் ஆக்டிவிட்டி ட்ராக்கர் மற்றும் ஸ்லீப் விரிஸ்ட்பேண்ட் ஆகும். இக்கருவி ரூ.4500/- விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,499/-க்கு இன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கிடைக்கும்.

மேலும் படிக்க
ஐபோன் 7 மாடலுக்கு இணையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications








