உடனே ரெடி ஆகுங்கள்.. 50% தள்ளுபடியுடன் AC, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், TV வாங்கலாம்.!

|

பண்டிகை காலம் வந்துவிட்டது, அனைத்து பக்கமும் சலுகை விளம்பரங்கள் தான் பதிவிடப்பட்டுள்ளது. பண்டிகை நெருங்கி வருவதால் அனைவரும் ஷாப்பிங் மூடில் இருக்கிறார்கள். சலுகை விலையில் எந்த பொருள், எந்த இடத்தில் கிடைக்குமென்று ஆன்லைனில் சர்ச் செய்து கொன்டே தான் இருக்கிறார்கள். 50% சலுகையுடன் பொருட்கள் வாங்க சான்ஸ் கிடைத்தால் வேண்டாம் என்ற சொல்வீர்கள், இல்லை தானே.

50% தள்ளுபடி

50% தள்ளுபடி

AC, டிவி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவென் உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரிக் சாதனங்களை 50% தள்ளுபடி சலுகையுடன் வாங்க சரியான நேரம் இது தான். அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Great Indian Festival) விற்பனையை அடுத்த வாரம் துவங்குகிறது. இந்த விற்பனையின் போது எலக்ட்ரிக் சாதனங்கள் 50% தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது.

அமேசான் vs பிளிப்கார்ட்

அமேசான் vs பிளிப்கார்ட்

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் துவங்குகிறது. அதேபோல், பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் துவங்குகிறது. இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களும் பல பொருட்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் TV, ஃப்ரிட்ஜ் மற்றும் AC போன்ற பொருட்களுக்கு அதிக சலுகையை வழங்கியுள்ளது.

பரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்! செவ்வாய் கிரகத்தில் உயிர்களா?

கூடுதல் 10% தள்ளுபடி

கூடுதல் 10% தள்ளுபடி

அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பு படி, HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதலாக 10% சலுகை கிடைக்கிறது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது ​​6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அமேசான் விற்பனை செய்கிறது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுடன் அமேசான் சேர்ந்து இந்த கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையை நிகழ்த்தவுள்ளது.

பிக் பில்லியன் டேஸ் விற்பனை

பிக் பில்லியன் டேஸ் விற்பனை

அமேசான் நிறுவனத்தைப் போல் பிளிப்கார்ட் நிறுவனமும் இந்த ஆண்டு சுமார் 850 நகரங்களில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளை பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக தன்னுடன் சேர்த்துள்ளது.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு என்ன சலுகை?

SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு என்ன சலுகை?

பிளிப்கார்ட் பயனர்களுக்கு SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் நோ-காஸ்ட் EMI வசதியை பஜாஜ் பின்சர்வ் வழங்குகிறது. பேடிஎம் கேஷ்பேக் சலுகையும் உங்களுக்கு உள்ளது.

AC-க்கு 50% முதல் 60% வரை தள்ளுபடி

AC-க்கு 50% முதல் 60% வரை தள்ளுபடி

இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் பொழுது AC-களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் சுமார் ரூ.16,000 முதல் AC சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் டைகின் (Daikin), கோத்ரேஜ் (Godrej), எல்ஜி (LG), வேர்ல்பூல் (Whirlpool) மாடல்களுக்கு சுமார் 60% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?

இந்த தயாரிப்புகளுக்கு சிறப்புத் தள்ளுபடி

இந்த தயாரிப்புகளுக்கு சிறப்புத் தள்ளுபடி

அமேசான் தளத்தில் அதன் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது TV வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

60 சதவீதம் வரை தள்ளுபடி

60 சதவீதம் வரை தள்ளுபடி

சாம்சங் (Samsung), சோனி (Sony), சியோமி (Xiaomi), எம்ஐ (Mi), ஒன்பிளஸ் (Oneplus) மற்றும் எல்ஜி (LG) போன்ற முன்னணி நிறுவனங்களின் டிவிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் விற்பனையில் டிவிகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்ஜ் மீதான சிறப்பு சலுகை

பிரிட்ஜ் மீதான சிறப்பு சலுகை

இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது புதிய பிரிட்ஜ் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் யோசிக்காமல் உடனே தயாராகிவிடுங்கள். அமேசான் தளத்தில் பிரிட்ஜ்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிறந்த தள்ளுபடியுடன் புதிய பிரிட்ஜ் வாங்கலாம். இதில் டைகின் (Daikin), கோத்ரேஜ் (Godrej), எல்ஜி (LG), வேர்ல்பூல் (Whirlpool) போன்ற நிறுவனங்களின் பிரிட்ஜ்களும் அடங்கும். அதேபோல், பிளிப்கார்ட் தளத்தில் பிரிட்ஜ் மீது 55% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங் மெஷின் மீதான சிறப்பு தள்ளுபடி

வாஷிங் மெஷின் மீதான சிறப்பு தள்ளுபடி

அமேசான் தளத்தில் இந்த சிறப்பு பண்டிகை கால விற்பனையின் போது நீங்கள் சிறந்த தள்ளுபடியுடன் புதிய வாஷிங் மெஷினை வாங்கலாம். சாம்சங் (Samsung), எல்ஜி (LG), வேர்ல்பூல் (Whirlpool), ஐ.எஃப்.பி (IFB), ஹையர் (Haier) போன்ற பிராண்டுகள் விற்பனைக்குக் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாஷிங் மெஷின் மீது 55% தள்ளுபடி கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival vs Flipkart Big Billion Days Sales What Is Different and Which Will Be Better For You : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X