Amazon சுதந்திர தின விற்பனை.. ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. 40 சதவீதம் தள்ளுபடி.. விட்றாதீங்க..
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival sale) எனும் சிறப்பு விற்பனை ஆனது ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் டிவிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல சாதனங்களைத் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஸ்மார்ட்போன்கள் மற்றும் அக்ஸசெரீஸ்கள் 40 சதவீதட் தள்ளுபடியைப் பெறும். குறிப்பாக ஆகஸ்ட் 6 முதல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G), ஒன்பிளஸ் நோர்ட் 5ஜி (OnePlus Nord 4 5G), ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) மற்றும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன்ற போன்களுக்கு கட்டாயம் தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G), ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Galaxy M35 5G) மற்றும் டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதுதவிர பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் டேப்லெட் (tablets) மாடல்களுக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்ஃபோன்களுக்கு (headphones) 75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு (smartwatches) 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பீக்கர் மாடல்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

அமேசான் சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சலுகையைப் பெற இருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் விற்பனைக்கு வரும். One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் போன். எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner)ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








