கொஞ்சம் காத்திருங்க: விரைவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விரைவலி தொடங்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை தினத்தில் பல்வேறு பொருட்களுக்கு அதிக அளவிலான சலுகைகள் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை
அமேசானின் அடுத்த பெரிய இந்திய விற்பனை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமான டீஸரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு சலுகைகளோடு கூடிய விற்பனை விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் சரியான தேதி குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. அமேசான் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் கூட்டு சேர்ந்து இஎம்ஐ பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 10% உடனடி தள்ளுபடியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் பிரைம் உறுப்பினர்கள்
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு பிற வாடிக்கையாளர்களைவிட முன்னதாகவே தொடங்கும். பிரைம் சந்தாவின் விலை ஒரு வருடத்திற்கு ரூ.999 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.129 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேட் இந்தியன் விற்பனை தொடங்கவிருப்பதையடுத்து இதுகுறித்து அறிவிக்க அமேசான் ஒரு சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள் உட்பட விற்பனைக்கு வரும் பொருட்களுக்கு நோகோஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு சலுகைகள்
மொபைல்கள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கு இதில் பல்வேறு சலுகைகளை வழங்கும் என்பதை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை பக்கம் சுட்டிக்காட்டுகிறது. எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இந்த விற்பனை தேதியில் அமேசான் 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

விலை இல்லாத இஎம்ஐ
அமேசான் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், விலை இல்லாத இஎம்ஐ போன்ற சலுகைகளையும் வழங்குகிறது. பழைய பொருட்களை பரிமாறும்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.13,500 வரை தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு விலை இல்லாத இஎம்ஐ கிடைக்கும்.

காம்போ சலுகைகள்
அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் ரேஞ்ச், ஃபயர் டிவி ஸ்டிக் உள்ளிட்டவைகளுக்கும் தள்ளுபடிகள் இருக்கும். அமேசான் தனது தயாரிப்புகளுக்கான காம்போ சலுகைகளையும் வழங்கும். கூடுதலாக, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் வீடு மற்றும் சமையலறை தயாரிப்புகளுக்கு 60% வரை பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. ஆடை, ஆபரணங்களுக்கு 70% வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

அமேசான் பே வாலட்
அமேசான் பே வாலட்டின் பயன்பாட்டை ஊக்குவிக்க நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை காலத்தில் அமேசான் பேவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 பரிசு கிடைக்கும். விற்பனை தேதிகள் மற்றும் சலுகைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் அமேசான் விரைவில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications