அது எதுக்கு இதே வாங்கலாம்: கொஞ்சம் காத்திருங்க., அமேசான் அதிரடி விற்பனை தினம்!
ஸ்மார்ட்போன்கள் சிறந்த சலுகைகளுடன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2020 விரைவில் தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இந்த ஆண்டு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் இந்த விற்பனை தேதியை அமேசான் வலைதளம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த விற்பனை தினத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஃபெஸ்டிவல் விற்பனை தள்ளுபடிகள்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடிகளில் ஸ்மார்ட்போன்கள் குறிப்பிடத்தகுந்த ஒன்று. வருகிற விற்பனை தேதியில் கிடைக்கும் குறிப்பிடதகுந்த ஸ்மார்ட்போன்களில் விவரங்களை பார்க்கலாம்.

5 ஜி ஸ்மார்ட்போன்கள்
5 ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.27,999 முதல் கிடைக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு 5 ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.50,000-த்துக்க மேல் கிடைத்தது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மூலம் 5 ஜி ஸ்மார்ட்போன்களை ரூ .27,999 க்கு வாங்கலாம்.

பெரிய பேட்டரிகள்
பெரிய பேட்டரிகள் அதாவது நீண்ட ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ரூ.8490 முதல் கிடைக்கிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதில் அடக்கம்.

AMOLED டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்
AMOLED டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் ரூ.13,999 முதல் கிடைக்கிறது. AMOLED டிஸ்ப்ளேயானது திரைப்படங்கள் பார்ப்பதற்கும் கேம்கள் விளையாடுவதற்கும் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

குவாட் கேமரா அமைப்பு
குவாட் கேமரா அமைப்புக் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.9,999 முதல் கிடைக்கும். குவாட் கேமரா அமைப்பானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதற்கு சிறந்த அம்சத்தை கொண்டுள்ளது. நான்கு கேமராக்களோடு உள்ள சிறந்த வடிவமைப்பும் இடம்பெறும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ரூ.7,499 இல் தொடங்குகின்றன. அதேபோல் அலெக்சா பில்ட் இன் ஸ்மார்ட்போன்கள் ரூ.13,999 முதல் கிடைக்கிறது. அமேசான் அலெக்சாவானது சிறந்த தொழில்நுட்பமாக அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications