Amazon ஆபர்: தள்ளுபடி விலையில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் போன்கள்.!
அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival sale 2022 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி, மோட்டோ, சாம்சங், ஒப்போ, விவோ என பல நிறுவனங்களின் போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் 5ஜி போன்களை கூட கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சாம்சங் போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எம்13 போனுக்கு ரூ.5,500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது ரூ.9,499-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு, 8எம்பி செல்பி கேமரா,எக்ஸிநோஸ் 850 பிராஸசர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 போன்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனுக்கு அமேசான் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 5ஜி போனை தற்போது ரூ.11,999-விலையில் வாங்க முடியும். இதன் முந்தைய விலை ரூ.16,999-என்று கூறப்படுகிறது.
5000 எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா,5எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசானில் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும்.
இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி
அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை தற்போது அமேசான் தளத்தில் ரூ.15,790-க்கு வாங்க முடியும். குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி,பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எஃப்23 5ஜி போன்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.32,999-என்று கூறப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை தற்போது அசேமான் தளத்தில் ரூ.24,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications