Home
News

தூள் பார்க்கப் போகும் Amazon கிரேட் பெஸ்டிவல் சேல்ஸ் 2023.. 75% சலுகை எந்த பொருட்களுக்கு?

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடவிருப்பதை முன்னிட்டு ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் இப்போதில் இருந்தே சிறப்பு விற்பனை தள்ளுபடிகளை அறிவிக்க துவங்கிவிட்டன. குறிப்பாக அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனங்களின் சிறப்பு விற்பனை தேதிகளை அறிவித்துவிட்டன.

இந்த சிறப்பு விற்பனை தினங்கள் தீபாவளிக்கு முன்பாக வரும் சிறப்பு விற்பனையாகும். இதனை தொடர்ந்து நிறுவனம் தீபாவளி சிறப்பு விற்பனை கொண்டாட்டத்தையும் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. சரி, இப்போது அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 (Amazon Great Indian Festival Sale 2023) விற்பனை பற்றிய விபரங்களை எதிர்பார்க்கலாம்.

தூள் பார்க்கப் போகும் Amazon கிரேட் பெஸ்டிவல் சேல்ஸ் 2023.. 75% சலுகை!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கும் என்று இரண்டு டிப்ஸ்டர்களால் லீக் செய்யப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் முதன்மை விற்பனை நிகழ்வு, போட்டியாளரான பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரே நேரத்தில் தங்கள் விற்பனையை அறிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசானின் பிற விற்பனை நிகழ்வுகளைப் போலவே, பல்வேறு தயாரிப்புகளின் மீது பலவிதமான டீல்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நிறுவனம் இப்போது வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023, அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தாதாரர்களுக்கு ஆரம்ப அணுகலை முன்கூட்டியே வழங்கும் என்பதையும் டிப்ஸ்டர் தகவல் உறுதி செய்துள்ளது.

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா மற்றும் அபிஷேக் யாதவ் என்ற 2 டிப்ஸ்டர்களால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களின் படி, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 (Amazon's Great Indian Festival Sale) விற்பனை அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கும். கசிந்த இரண்டு ஸ்கிரீன் ஷாட்களும் e-commerce தளத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இந்த விற்பனையின் போது SBI வங்கி கூடுதல் தள்ளுபடியை வழங்கும் என்று கூறப்படுகிறது.

தூள் பார்க்கப் போகும் Amazon கிரேட் பெஸ்டிவல் சேல்ஸ் 2023.. 75% சலுகை!

இதற்கிடையில், நிறுவனத்தின் இணையதளத்தில் சமீபத்தில் நேரலையில் வந்த அமேசான் விற்பனைக்கான லேண்டிங் பக்கம் கம்மிங் சூன் (Coming Soon) என்ற குறிப்பை குறிப்பிட்டுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 இன் போது தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது, ​​எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியைப் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தயாரிப்புகள் மீதும் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் மாறுபடும், மேலும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன் இந்த ஒப்பந்தங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த சிறப்பு விற்பனையின் போது இ-காமர்ஸ் தளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தகுதியான ஸ்மார்ட்போன்களில் வர்த்தகம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் 60,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளையும் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. பழைய போன்களை கொடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை மாற்றம் செய்துகொள்ள இந்த சிறப்பு விற்பனையையே மக்கள் பயன்படுத்துக்கொள்வது சிறப்பானது.

தூள் பார்க்கப் போகும் Amazon கிரேட் பெஸ்டிவல் சேல்ஸ் 2023.. 75% சலுகை!

இந்த விற்பனையின் போது ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3), சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) மற்றும் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன்ற ஸ்மார்ட்போன்கள் மீது பலமான தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று டீஸர் படங்கள் தெரிவிக்கின்றன.

டிப்ஸ்டரால் பகிரப்பட்ட படத்தின் படி, வரவிருக்கும் Amazon Great Indian Festival Sale 2023 இன் போது இ-காமர்ஸ் நிறுவனமானது ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது டிவி மற்றும் பிற எலெக்ட்ரோனிக்ஸ் கேட்ஜெட்களை வாங்க இந்த சிறப்பு விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதனால், இப்போதிலிருந்தே உங்கள் ஷாப்பிங் லிஸ்டை தயார் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Sale 2023 Starts From October 10 In India Discount and Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X