65% தள்ளுபடியுடன் 4கே ஸ்மார்ட் டிவியா?- அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் 4கே டிவி, ப்ரீமியம் டிவி, பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பலவற்றுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் சிறு வணிகங்களை ஆதரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அமேசான் நிறுவனம் இறுதியாக அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி இந்த விற்பனை நடைபெற உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பானது சிறுகுறு விற்பனையாளர்களுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள்
450 நகரங்களில் இருந்து 75000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள் இதில் பலன் பெறும் எனவும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் தனித்துவமான தயாரிப்புகளை வாங்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பில் அமேசான் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை காண்பிக்க உதவும். பல்வேறு இந்திய பிராண்டுகளில் தொடங்கி உலகளாவிய பிராண்டுகள் வரை ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

அக்டோபர் 4 2021 முதல் தொடக்கம்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அக்டோபர் 4 2021 முதல் தொடங்குகிறது. அமேசான் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினங்களில் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அமேசான் எக்கோ, ஃபயர் டிவி மற்றும் கின்ட்டல் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பிரைம் மற்றும் பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு கவர்ச்சிகரமான பல தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

10 சதவீத உடனடி தள்ளுபடி
சலுகைகள் குறித்து பார்க்கையில், அமேசான் எச்டிஎஃப்சி வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. அமேசான் பே பயனர்களுக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் குறித்து பார்த்தோம். தற்போது ஸ்மார்ட்டிவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவிகள்
தங்கள் வீடுகளை அலங்கரித்து தியேட்டர் தர அனுபவத்தை உணரும் வகையில் ஸ்மார்ட் டிவிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் பெரிய திரை அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு 55 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் டிவிகள்
சிறந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் வரும் ஸ்மார்ட்டிவிகளுக்கு 55% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. தாங்கள் வாங்கும் ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே வழங்கும் காட்சி அனுபவத்தில் அதிக கவனம் செலுதுப்பவராக இருந்தால், அந்த வகையிலான தேர்வில் ஸ்மார்ட் டிவியை 55 சதவீதம் வரை தள்ளுபடியுடன் வாங்கலாம்.

65% வரை தள்ளுபடிகள்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் 4கே ஸ்மார்ட் டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 4 கே ஸ்மார்ட்டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்சா இயக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகள்
அலெக்சா இயக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அலெக்சா உள்ளமைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் இந்த தயாரிப்புகளை 50% தள்ளுபடியுடன் வாங்கலாம்.

ஃபயர் எடிஷன் ஸ்மார்ட் டிவி
ஃபயர் எடிஷன் ஸ்மார்ட் டிவிகளுக்கு 35% வரை தள்ளபடிகள் வழங்கப்பட இருக்கின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பில் ஃபயர் எடிஷன் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட் டிவிகளுக்கு 35 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ப்ரீமியம் ஸ்மார்ட் டிவிகள்
ப்ரீமியம் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் கிடைக்கும் ப்ரீமியம் விலை ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications