Home
News

Amazon Great Indian Festival: இது ஓஹோ.. அது ஆஹா.. எதை எடுத்தாலும் அதீத தள்ளுபடி!

இந்தியாவில் பிரதான ஆன்லைன் விற்பனை தளங்களாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்த இரண்டு நிறுவனங்களும் அவ்வப்போது பண்டிகை கால விற்பனையை அறிவித்து அதீத தள்ளுபடியுடன் சாதனங்களை வழங்கும். இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஒரே தினத்தில் பண்டிகை கால விற்பனையை அறிவிக்க இருக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை ஒரே தினங்களில் நேரலையில் வர இருக்கிறது.

இரண்டு எதிர்எதிர் நிறுவனங்களின் போட்டி கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பலன் உள்ளதாக தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இரண்டு நிறுவனங்களும் ஒரே தினங்களில் சலுகைகளை வழங்க இருக்கும் காரணத்தால், தள்ளுபடி குறித்த எந்த அறிவிப்பும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

இருப்பினும் அவ்வப்போது டீஸர்கள் மூலம் குறிப்பிட்ட தகவல் வெளியாகி வருகிறது.

சிறந்த தள்ளுபடியில் ஐபோன்கள்

சிறந்த தள்ளுபடியில் ஐபோன்கள்

அதன்படி ஐபோன் 12 ஆனது ரூ.40,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என டீஸர்கள் காட்டுகின்றன. சரியான விலை விவரங்கள் தற்போதுவரை தெரியவில்லை.

செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனை நேரலையின் போது தள்ளுபடி விவரங்கள் தெரியவரலாம்.

அதோடு சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.52,999க்கு குறைவாக விற்பனைக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஐபோன் 13 மற்றும் ஐபோன் 11 மாடல்களும் சிறந்த தள்ளுபடியில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

டீஸர்கள் மூலம் வெளியான தகவல்..

டீஸர்கள் மூலம் வெளியான தகவல்..

அமேசான் தனது வருடாந்திர கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 23 அன்றும் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்வானது இந்த மாத இறுதி வரை நடைபெறும்.

தங்களுக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் இந்த விற்பனை தினங்களில் வாங்கலாம்.

முன்னதாக குறிப்பிட்டது போல், அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட டீல்களை டீஸர்களாக வெளியிட்டு வருகிறது. அதில் தான் ஐபோன் 12, சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஃப்23 உள்ளிட்ட போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் மற்றும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ போன்ற இடைநிலை ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் ரூ.26,999க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் Xiaomi 12 Pro ஆனது ரூ.45,499 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம். சியோமி நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Xiaomi 12 Pro இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பல்வேறு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில்..

iPhone 13 மற்றும் iPhone 11 ஆகிய சாதனங்களுக்கான ஒப்பந்தங்களை அமேசான் இன்னும் வெளியிடவில்லை.

Nord CE 2 Lite ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000க்கு குறைவான விலையில் கிடைக்கலாம். Realme Narzo 50 5G ஸ்மார்ட்போனானது ரூ.1000 தள்ளுபடியை பெறலாம், Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன் ரூ.8499 என்ற விலையில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Nord CE 2 Lite மற்றும் iQOO Z6 Pro 5G

Nord CE 2 Lite மற்றும் iQOO Z6 Pro 5G

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் OnePlus Nord CE 2 Lite ரூ.16,999க்கு கிடைக்கும் என டீஸர்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் iQOO Z6 Pro 5G ஸ்மார்ட்போன் ரூ.17,990க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கூடுதலாக பல சலுகைகள்

கூடுதலாக பல சலுகைகள்

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனானது ரூ.10,799க்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

நிறுவனம் நிர்ணயித்த தள்ளுபடியுடன் வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ கட்டண விருப்பம், ஸ்மார்ட்போன் கேரண்டி பிளான் உள்ளிட்ட பல சலுகைகள் கூடுதலாக வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Flipkart Big Billion Days

Flipkart Big Billion Days

அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 13 அதீத தள்ளுபடியில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Apple India இணையதளத்தில் ஐபோன் 13 இன் 128GB வேரியண்ட் விலை ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் Flipkart Big Billion Days நிகழ்வில் ஐபோன் 13 ரூ.49,990 என்ற விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival: iPhone 12, Samsung Galaxy S22 and more Can get Massive price cuts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X