Home
News

கொத்தா தூக்குவீங்க.. டிவி, போன்களுக்கு நம்ப முடியாத ஆஃபர்.. அமேசான் அதிரடி.. இதோ லிஸ்ட்..

பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனைத் திட்டங்களை அறிவித்த உடனே அமேசான் (Amazon) நிறுவனமும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த சில வாரங்களில் முக்கியமான பண்டிகைகள் வர இருக்கிறது. இதை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அடுத்த சில வாரங்களில் தொடங்க உள்ளது அமேசான்.

குறிப்பாக அமேசான் தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2023 (Amazon Great Indian Festival 2023) விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளது. எனவே இன்னும் சில வாரங்களில் அமேசான் தனது சிறப்பு விற்பனையைத் தொடங்க உள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை வழக்கம் போல் பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும்.

கொத்தா தூக்குவீங்க.. டிவி, போன்களுக்கு நம்ப முடியாத ஆஃபர்..

அமேசான் சிறப்பு விற்பனையின் போது, மொபைல் (mobile) மற்றும் ஆக்சஸெரீகளுக்கு (accessories) 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அலெக்சா (Alexa), ஃபையர் டிவி (Fire TV), Kindle போன்ற சாதனங்களுக்கு 55 சதவீதம் கிடைக்கும். ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், டிவிகள் போன்ற சாதனங்களுக்கு 75 சதவீதம் கிடைக்கும்.

அதேபோல் புத்தகங்கள், பொம்மைகள் போன்றவற்றுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அமேசான் சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ (SBI) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி இஎம்ஐ முறையில் சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக அமேசான் சிறப்பு விற்பனை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியை (Redmi Smart Fire TV 4K 43) அறிமுகம் செய்தது. இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டிவி அமேசான் தளத்தில் தான் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆனால் ரெட்மி நிறுவனம் இதுவரை 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் விற்பனை தேதியை அறிவிக்கவில்லை. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள்: 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. குறிப்பாக மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த புதிய டிவி. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. அதேபோல் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

கொத்தா தூக்குவீங்க.. டிவி, போன்களுக்கு நம்ப முடியாத ஆஃபர்..

அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. எனவே வாய்ஸ் அசிஸ்டண்ட் கொண்ட இந்த ரிமோட் ஆதரவுடன் டிவியை அருமையாக இயக்க முடியும். அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்மார்ட் ரிமோட்.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த அதிநவீன ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2023 sale to start soon: Teaser released: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X