ரூ.27000 ஸ்மார்ட்டிவி ரூ.10,000 மட்டுமே.. Amazon இருக்க பயமேன், வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

|

Amazon Great Indian Festival 2022 நடந்துக் கொண்டிருக்கிறது என்பது அறிந்திருப்போம். இந்த விற்பனை தினங்களில் பல எலக்ட்ரானிக் தயாரிப்புகளும் அதீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

கூடுதலாக வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என பல தள்ளுபடிகள் பொருட்களின் விலையை இன்னும் குறைக்கிறது. திட்டமிட்ட கேட்ஜெட்களை பலரும் சிறந்த தள்ளுபடியுடன் வாங்கி வருகின்றனர்.

சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்டிவிகள்

சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்டிவிகள்

Amazon Great Indian Festival 2022 இல் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

நீங்கள் ஏதேனும் ஸ்மார்ட்டிவியை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சோனி பிராண்ட் ஸ்மார்ட்டிவி முதல் அடிப்படை நிறுவன ஸ்மார்ட் டிவிகள் வரை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

வீட்டில் பிரதான தேவையாக ஸ்மார்ட்டிவிகள் மாறி வருகிறது. நீங்கள் ஸ்மார்ட்டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த தள்ளுபடி தினங்களை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்டிவிகள் பட்டியல் இதோ.

32 இன்ச் டிவிகள் லிஸ்ட்

32 இன்ச் டிவிகள் லிஸ்ட்

Redmi Smart TV

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 32 இன்ச் எச்டி ரெடி ஆதரவு டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. டால்பி ஆடியோ ஆதரவுடன் கூடிய DTS-HD தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்ட 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இது பக்கா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் ஆதரவும் இருக்கிறது.

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 56 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.24,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10,999 என கிடைக்கிறது.

LG Smart TV

LG Smart TV

ஸ்மார்ட்டிவிகளுக்கு மிகவும் புகழ் பெற்ற பிராண்ட் எல்ஜி ஆகும். எல்ஜி இன் இந்த 32 இன்ச் ஸ்மார்ட்டிவி நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது. இது webOS மூலம் இயங்குகிறது.

32 இன்ச் டிஸ்ப்ளே எச்டி ரெடி ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 10W டூயல் சேனல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு இதில் இருக்கிறது.

இந்த LG Smart TV ஸ்மார்ட்டிவியானது ரூ.21,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.12,980 என கிடைக்கிறது.

AmazonBasics Fire TV

AmazonBasics Fire TV

AmazonBasics Fire TV ஆனது 59 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் A+ கிரேடு LED டிஸ்ப்ளே பேனல் மற்றும் HD-ரெடி ரெசல்யூஷனைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது மிரரிங், பேரண்ட் கண்ட்ரோல், இன்பில்ட் அலெக்சா உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது. இது Fire TV OS மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்டிடிவியானது டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.27,000க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10,999 என கிடைக்கிறது.

50 இன்ச் ஸ்மார்ட் டிவி லிஸ்ட்

50 இன்ச் ஸ்மார்ட் டிவி லிஸ்ட்

OnePlus 43Y1S Pro

OnePlus 43Y1S Pro ஸ்மார்ட்டிவியானது 4K (3,840x2,160 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 43 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது க்ரோம் காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு டிவி 10 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய 24W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 33 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.39,999க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவியானது தற்போது ரூ.26,999 என கிடைக்கிறது.

Samsung AUE60 கிரிஸ்டல் 4K UHD ஸ்மார்ட் டிவி

Samsung AUE60 கிரிஸ்டல் 4K UHD ஸ்மார்ட் டிவி

Samsung AUE60 கிரிஸ்டல் 4K UHD ஸ்மார்ட் டிவி ஆனது (3,840x2,160 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 43 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியில் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான அணுகலைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி Tizen OS மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.52,900க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் ரூ.28,969க்கு கிடைக்கிறது.

50 இன்ச் ஸ்மார்ட் டிவி லிஸ்ட்

50 இன்ச் ஸ்மார்ட் டிவி லிஸ்ட்

Sony Bravia KD-55X74K

கிளாரிட்டி, காட்சி தரம், சவுண்ட் என அனைத்துக்கும் புகழ் பெற்ற நிறுவனம் சோனி.

சோனியின் Sony Bravia KD-55X74K ஸ்மார்ட்டிவியும் தற்போது சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. சோனி பிராவியா KD-55X74K ஆனது 4K HDR ஆதரவுடன் X1 4K செயலியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 55 இன்ச் 4கே டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ தொழில்நுட்பத்துடன் கூடிய 20W ஓபன்-பேஃபிள் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளுக்கான அணுகலை இந்த ஸ்மார்ட்டிவி வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்டிவிக்கு 39 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.99,900க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவி ரூ.60,999 என கிடைக்கிறது.

Xiaomi 55-இன்ச் OLED விஷன் டிவி

Xiaomi 55-இன்ச் OLED விஷன் டிவி

Xiaomi 55-இன்ச் OLED விஷன் டிவி ஆனது IMAX மேம்படுத்தப்பட்ட, 4K HDR மற்றும் Dolby Vision IQ தொழில்நுட்பங்களுடன் 55-இன்ச் 4K பெசல்-லெஸ் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. 30W வெளியீட்டு ஆதரவுடன் கூடிய எட்டு ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ.1,99,999க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது தற்போது ரூ.89,999 என கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival 2022 Sale: Xiaomi, Samsung, Sony Smart TV Available Upto 55% Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X