Amazon இருக்க பயமேன்- எந்த பொருளையும் இப்ப வாங்காதீங்க.. மீறினால் ரொம்ப வருத்தப்படுவீங்க
Amazon Great Indian Festival செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனை தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஃபேஷன் & அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட் டிவிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல சாதனங்களுக்கும் நம்ப முடியாத அளவிற்கு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

பலமான போட்டி, அதிகமான தள்ளுபடி
இந்தியாவில் பிரதான ஆன்லைன் விற்பனை தளங்களாக இருப்பது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகும்.
இந்த இரண்டு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களும் ஒரே தினங்களில் ஃபெஸ்டிவல் தின தள்ளுபடிகளை அறிவிக்க இருக்கிறது.
ஆம், பிளிப்கார் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஒரே நேரத்தில் நடக்க இருக்கிறது.
எனவே போட்டியும் பலமாக இருக்கும், தள்ளுபடிகளும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனை தொடக்கம்
Amazon Great Indian Festival செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனை தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த மெகா ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் தொடங்கி பல்வேறு கேட்ஜெட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது.
இந்த தினங்களில் SBI கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத கட்டாய தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்கள் ஒரே தினங்களில் ஃபெஸ்டிவல் விற்பனைகளை அறிவிக்க இருக்கும் காரணத்தால் இரண்டு தளங்களும் சலுகை குறித்த சிறிய தகவலை கூட வெளியிடவில்லை.
இருப்பினும் பிளிப்கார்ட் இல் நத்திங் ஃபோன் (1) மற்றும் கூகுள் பிக்சல் 6a ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போனுக்கு அதீத தள்ளுபடிகள்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த விற்பனையில் எஸ்பிஐ கார்ட் பயனர்களுக்கு 10 சதவீத கட்டாய தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையை Samsung Galaxy M மற்றும் iQoo ஸ்பான்சர் செய்கிறது, எனவே இந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கப்பட இருந்தாலும் அதன் பிரைம் உறுப்பினர்கள் முன்கூட்டியே தள்ளுபடிக்கான அணுகலை பெறுவார்கள் என்பதை அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், சியோமி போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

75 சதவீதம் வரை தள்ளுபடி
லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் 75 சதவீதம் வரை தள்ளுபடியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 13 மற்றும் ஐக்யூ 9டி போன்ற ப்ரீமியம் போன்கள் பெரும் தள்ளுபடியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரியல்மி, சியோமி மற்றும் ஒன்பிளஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அமேசானில் அதீத தள்ளுபடி வழங்கப்படும் என கணிக்கப்படுகிறது.
குறிப்பாக Nord CE 2 Lite, Nord 2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படலாம்.

Samsung Galaxy M32 5G மற்றும் iPhone 12
Samsung Galaxy M32 5G ஆனது ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.18,999 முதல் விற்பனைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 12 ஆனது ரூ.65,990 என விற்கப்படும் நிலையில் அமேசான் தள்ளுபடி விற்பனையில் இந்த மாடல் ரூ.52,999 என கிடைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் ஐபோன் 12 பெரிய தள்ளுபடியை பெறும் என அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கும்.

சில நாட்கள் மட்டும் காத்திருங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தள்ளுபடி குறித்த முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சில தினங்கள் மட்டும் காத்திருங்கள். உங்களுக்கு விருப்பமான கேட்ஜெட்களை அதீத தள்ளுபடியுடன் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications