Amazon Festival விற்பனை: பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்.. பாதிக்கு பாதி விலை!
Amazon Great Indian Festival 2022 லைவ்வில் இருக்கிறது என்பதை அறிந்திருப்போம். இதில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
எந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கிறது என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். இதை நிவர்த்தி செய்யும் வகையிலான தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

அமேசன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022
அமேசன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022 இல் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.
சாம்சங், ரெட்மி, ஒப்போ உள்ளிட்ட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதேபோல் கூடுதலாக எஸ்பிஐ கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் விரைவில் முடிவடைய இருக்கும் காரணத்தால் நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

Samsung Galaxy M33 5G
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.24,999 ன கிடைத்த நிலையில் தற்போது ரூ.14,999 என கிடைக்கிறது.

Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 12-பேண்ட் 5G ஆதரவுடன் Samsung Exynos 1280 SoC மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என கிடைக்கிறது.
தள்ளுபடி தினங்களில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12600 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

Redmi Note 11T 5G
Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனானது ரூ.20,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 என கிடைக்கிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5,000mAh பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

Oppo A31
Oppo A31 ஸ்மார்ட்போனானது ரூ.15,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.11990 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது டூயல் நானோ சிம் ஆதரவுடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி சிப்செட் ஆதரவு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும், முன்புறத்தில் 8 எம்பி செல்பி ஷூட்டர் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Redmi Note 10S
Redmi Note 10S ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 என கிடைக்கிறது.
Redmi Note 10S ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12.5 மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Oppo A54
Oppo A54 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,990 என கிடைக்கிறது.
60 ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.51 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயங்குகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
13 எம்பி டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

Tecno Spark 8 Pro
Tecno Spark 8 Pro ஸ்மார்ட்போனானது ரூ.13,499 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8999 என கிடைக்கிறது.
Tecno Spark 8 Pro ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.
48 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications