அக்டோபர் 4 உறுதி: ரெடி பண்ணிக்கோங்க- எதிர்பார்க்காத சலுகை, தள்ளுபடியுடன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!
அமேசான் கிரேட் இந்தியன் விழா 2021 விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் சிறு வணிகங்களை ஆதரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அமேசான் நிறுவனம் இறுதியாக அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி இந்த விற்பனை நடைபெற உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பானது சிறுகுறு விற்பனையாளர்களுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான தயாரிப்புகளை வாங்க உதவும்
450 நகரங்களில் இருந்து 75000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள் இதில் பலன் பெறும் எனவும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் தனித்துவமான தயாரிப்புகளை வாங்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 அறிவிப்பில் அமேசான் விற்பனையாளர்களின் தயாரிப்புகளை காண்பிக்க உதவும். பல்வேறு இந்திய பிராண்டுகளில் தொடங்கி உலகளாவிய பிராண்டுகள் வரை ஏணைய தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்
அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 1000 புதிய வெளியீடுகள் உள்ளிட்ட பலவற்றை வழங்க இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் புதிய அறிமுகங்களும் இருக்கின்றன. இவைகள் சலுகையோடு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகள்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகள் இதில் அடக்கம். முன்னணி பிராண்ட்களான சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஒன்பிளஸ், சோனி, ஆப்பிள், போட், லெனோவா, எச்பி, ஆசஸ், ஃபோசில், லெவிஸ், பிபா, ஏலியன் சோலி, அடிட்டாஸ், அமெரிக்கன் டூரிஸ்டர், ப்ரெஸ்டிஜ், யுரேகா ஃபோர்ப்ஸ், போஸ்ச், சோனி பிஎஸ்5, மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட பலவைகள் இதில் கிடைக்கும்.

பல்வேறு வகை தள்ளுபடிகள்
அமேசான் பே, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் சாதனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏணைய சலுகைகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்பு ஆதரவாக ரூ.750 உடன் 5% ரிவார்ட் புள்ளிகளும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அமேசான் வணிக வாடிக்கையாளர்களுக்கு பெருநிறுவனங்களின் பரிசளிப்புகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. இதில் பிரத்யேக சலுகைகள், மொத்த தள்ளுபடிகள், குறைந்த விலை சாதனத்துக்கும் சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளிட்ட ஏணைய வெகுமதிகள் வழங்கப்பட இருக்கிறது.

பல்வேறு வகை தயாரிப்புகள்
பல்வேறு வகை தயாரிப்புகள் வாங்கும் போது அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரிவுகளில் எச்பி, லெனோவா, கேனான், கோத்ரெஜ், கேசியோ, யுரேகா ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பலவகை சிறந்த பிராண்டுகளின் லேப்டாப்கள், பிரிண்டர்கள், நெட்வொர்க்கிங் சாதனங்கள் உள்ளிட்ட பல அலுவலக சாதனங்களும் இதில் அடங்கும். புதிய பிரைம் வீடியோ உள்ளடக்கத்தையும் அமேசான் வழங்கும் என கூறப்படுகிறது. பல்வேறு திரைப்படம், தொடர்களும் இதில் அடக்கம்.

பிக் பில்லியன் தின விற்பனை
பண்டிகை காலத்தில் ரியல்மி இந்தியா தனது தயாரிப்புகளை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. முன்னதாகவே இ-காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட் வரவிருக்கும் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ஐ டீஸ் செய்யப்பட்டுள்ளது. விற்பனையின் போது பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களுக்கு முக்கிய ஒப்பந்தங்களை வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான நேரம்
கையில் ஸ்மார்ட்போன்களை போல் வீட்டில் ஸ்மார்ட்டிவி என்பதும் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. ஓடிடி பிளாட்ஃபார்ம் அணுகல், யூடியூப் ஸ்ட்ரீமிங், பென்டிரைவ் அணுகல் உள்ளிட்ட தியேட்டர் தர அனுபவத்துக்கு ஸ்மார்ட்டிவிகள் பிரதானமாக இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு விலைப்பிரிவுகளிலும் ஸ்மார்ட்டிவிகள் கிடைக்கிறது. வீட்டில் ஸ்மார்ட்டிவிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கும் இது சரியான வாய்ப்பாகும்.

அக்டோபர் 4 , அக்டோபர் 7
காரணம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அக்டோபர் 4 ஆம் தேதியும், பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு முன்னணி ஆன்லைன் விற்பனை தள நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்க இருக்கின்றன. ஏதாவது சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications