Home
News

ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி: அமேசான் வழங்கும் சுதந்திர தின சலுகை!

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்க இருக்கிறது. இதன்மூலம் கடைக்காரர்கள் மற்றொரு பெரிய ஒப்பந்தங்களை உறுதிப்படுத்த இருக்கின்றனர். சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் தொடங்கி புதிய ஸ்மார்ட் டிவிகள் வரை அனைத்தும் வாங்க சரியான வாய்ப்பு இதுவாகும். சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை சிறந்த வாய்ப்பாகும். இந்த அறிவிப்பில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்32, ரெட்மி நோட் 10 எஸ் ஆகிய சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தேதி

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தேதி

வரவிருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடக்க இருக்கிறது. வழக்கம்போல் ஸ்மார்ட்போன்கள் போன்ற அனைத்து கேஜெட்டுகளுக்கும் பலவிதமான சலுகை வழங்கப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசான் இந்த அறிவிப்பு சிறந்த வாய்ப்பாகும், காரணம் இதில் பல்வேறு சலுகைகளும் விலைக்குறைப்பும் வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சலுகை

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சலுகை

வரவிருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் விற்பனைக்கு வர உள்ளது. நடுத்தர விலைப்பிரிவில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனை அமேசான் பிரைம் தின தொடங்கப்பட்டது. அமேசான் பிரைம் தின விற்பனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை ரூ.29,999 என்ற விலையில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் கூடுதலாக பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்32, ரெட்மி நோட் 10 எஸ் உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சாம்சங் கேலக்ஸி எம்32 சாதனத்துக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.3000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 ஆக கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனுக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் தள்ளுபடி பெறுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி

ஐபோன் 11, ஒன்பிளஸ் 9 சீரிஸ், ஐக்யூ இசட்3, சியோமி எம்ஐ 11 எக்ஸ் போன்ற் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் கேஜெட்கள் வாங்க தவறவிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Sale Starts on August 5 With Huge Discounts on Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X