Home
News

Amazon Great Freedom Festival sale: ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப்களுக்கு அதிரடி தள்ளுபடி.!

அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் Amazon Great Freedom Festival sale எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஆனது ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 -ம் தேதி முடிவடைகிறது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல்

அமேசான் வழங்கும் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போன்கள், லேப்டாப் மாடல்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை வாங்க இதுவே சரியான நேரம் என்று கூறலாம்.

அமேசான் கிரேட் ஃப்ரீடம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில், அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் மொபைல் போன்களை 40 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். பின்பு எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு சாதனங்களை 60 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்

இதுதவிர அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுடன் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

 டெக்னோ போவா 2 ஸ்மா

அதாவது ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் போது 4ஜிபி ரேம் கொண்ட டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனை ரூ.10,499-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட டெக்னோ போவா 2 மாடலை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

டெக்னோ போவா 2

டெக்னோ போவா 2

டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போன் மாடல் 6.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். டெக்னோ போவா 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவும் உள்ளது. பின்பு HiOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய சாதனம்.

பிரதான கேமராவுடன்

48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கேமராவுடன், 2 மெகாபிக்சல்கள் கொண்ட மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல்கள் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் AI புகைப்படம் எடுப்பதற்கான 2 மெகாபிக்சல்கள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டகுவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதுஇந்த புதிய சாதனம். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பெரிய சைஸ் பேட்டரி போனில் இதுவும் ஒன்று எனக் கூறலாம். அதாவது 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 2 சாதனம் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival sale: Best offers for smartphones, TVs, laptops!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X