ரூ.10,000 விலையில் நச்சுனு 7 போன்.. இப்போவிட்டா திரும்ப கிடைக்காத சலுகை.. உடனே முந்துங்க..
அமேசான் நிறுவனம் அதன் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale 2023) விற்பனையை, அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் 8 ஆம் தேதி (நாளை) வரை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள் மீது அபார தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ. 10,000 விலைக்குள் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அள்ளிச் செல்ல ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விற்பனையானது SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்வு செய்யும் போது 10 சதவீத உடனடி தள்ளுபடியை கூடுதலாக வழங்குகிறது.

இந்த சிறப்பு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2023 விற்பனையில் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய ஏழு நுழைவு நிலை ஃபோன்களின் பட்டியலை இங்கு உங்களுக்காக தொகுத்துள்ளோம். இதில் ரியல்மி (Realme), சாம்சங் (Samsung), நோக்கியா (Nokia), ஐடெல் (Itel), டெக்னோ (Tecno), லாவா (Lava) மற்றும் ரெட்மி (Redmi) போன்ற பிராண்டுகளின் போன்கள் இடம்பெற்றுள்ளன.
ரியல்மி நர்ஸோ என் 53 (Realme Narzo N53)
இந்த போன் 18% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. Realme Narzo N53 இன் விலை ரூ. 8,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.74' இன்ச் டிஸ்பிளேவுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 5,000mAh பேட்டரி உடை 33W SuperVOOC சார்ஜிங்கை வழங்குகிறது. பின்புறத்தில் 50MP AI டிரிபிள் கேமரா உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 13 (Samsung Galaxy M13)
Amazon Great Freedom Festival 2023 விற்பனையில், Samsung Galaxy M13 தள்ளுபடி விலையில் ரூ. 9,649 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 8 எம்பி கேமராவும், பின்புறத்தில் 50MP+5MP+2MP டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
நோக்கியா ஜி11 (Nokia G11)
Nokia G11 தற்போது Amazon இல் ரூ.7,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இது 5,050 mAh பேட்டரியுடன் 3 நாட்கள் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. இது 6.5' இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90 ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 50 எம்பி டூயல் ஏஐ பின்புற கேமரா கேமராவை கொண்டுள்ளது. இது Unisoc T606 சிப்செட் உடன் இயங்குகிறது.

ஐடெல் எஸ் 23 (Itel S23)
Itel S23 சாதனம் ரூ, 8,499 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9)
Tecno Spark 9 ஆனது MediaTek Helio G37 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது தற்போதைய சிறப்பு விற்பனையில் ரூ. 7,099 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6' இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2)
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ, 8,999 விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது Unisoc T616 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6.5' இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
ரெட்மி 11 பிரைம் (Redmi 11 Prime)
Redmi 11 Prime ஆனது ரூ. 8,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G99 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் இணைக்கப்பட்ட 50MP AI டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த 7 ஸ்மார்ட்போன்களும் இப்போது மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கின்றன. இந்த லக்கி சான்ஸை நழுவவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








