Home
News

அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ்: 80% வரை தள்ளுபடி.. ஆரம்ப தேதி இது தான்.. நோட் பண்ணுங்க!

அப்புறம் என்னப்பா, ஆகஸ்ட் மாதம் வந்துடுச்சு.. அமேசான், பிளிப்கார்ட்னு எல்லாரும் இப்போ சேல்ஸ் ஆரம்பிக்க போறாங்க, உங்க விஷ்லிஸ்ட்ல இருக்க எல்லா பொருட்களையும் சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க சிறப்பு விற்பனை ஆரம்பிக்கப்போகிறது.

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம், அமேசான் இந்தியா தனது தளத்தில் அதன் சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளதாக அறிவிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கசியவிடத் துவங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ் (Amazon Great Freedom Festival Sale) அடுத்த வாரம் துவங்கவுள்ளது.

அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ்: 80% வரை தள்ளுபடி..

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விற்பனையின் போது, அமேசான் நிறுவனம் பல கோடி தயாரிப்புகளின் மீது, எண்ணில் அடங்காத அளவில் சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கவுள்ளது.

குறிப்பாக, ஸ்மார்ட் போன், லேப்டாப், எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்கள் மீதும், பல்வேறு தயாரிப்புகளின் மீதும், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல, அமேசான் பிரைம் சந்தா உள்ள சிறப்பு பிரைம் உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே விற்பனைக்கான ஆரம்ப அணுகலை அனுபவிக்க முடியும்.

இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் மீது கணிசமான தள்ளுபடியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது., இது உங்களுக்குப் பிடித்த கேஜெட்களைப் பெறுவதற்கான சரியான நேரமாக அமைய போகிறது மக்களே. இத்துடன், சிறப்பு வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், உங்கள் வங்கிக்கு என்ன தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் கவனிக்க மறக்காதீர்கள்.

எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்குதல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் மின்னணு சாதனங்களை 'கிரேட் பிரைஸ்' உடன் வழங்குகிறது. இது பரந்த அளவிலான பொருட்களில் குறிப்பிடத்தக்க விலை குறைப்புடன் கூடுதல் வங்கி சலுகையையும் வழங்குகிறது.

அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ்: 80% வரை தள்ளுபடி..

சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus), ரியல்மி (Realme) மற்றும் பல பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, அமேசான் நிறுவனம் லேப்டாப் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை விரும்புவோருக்கும் அட்டகாசமான சலுகையை வழங்குகிறது.

அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ் டீஸர் பக்கம் லேப்டாப், இயர்போன்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களின் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடியை உறுதியளிக்கிறது. மேலும், ஆப்பிள் மற்றும் பிற உற்பத்தியாளர்களின் டேப்லெட்டுகள் மீதும் இந்த சிறப்பு அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையின் போது 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையில், லேப்டாப் சாதனங்கள் மீது ரூ. 40,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 75 சதவிகிதம் வரை தள்ளுபடியை பயனர்கள் காணலாம் என்று கூறப்படுகிறது.

இது பிளாட் தள்ளுபடிகள் மற்றும் வங்கி அட்டை சலுகைகளை இணைக்கும். புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பும் பயனர்கள், 4K மாடல்கள் உட்பட ஸ்மார்ட் டிவிகள் விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும், 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது தவிர வாஷிங் மெஷின் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் அல்லது பிரிட்ஜ் மீதும், வீட்டு உபயோகப் பொருட்கள் மீதும் கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனியின் ப்ளேஸ்டேஷன் 5 மற்றும் பிற கேமிங் தயாரிப்புகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகள் விற்பனையில் உள்ளதால் கேமிங் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடையலாம். கேம்களும் 80 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival Sale 2023 Date Revealed Get Ready to Start Shopping
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X