அடுத்த 5 நாள் அமேசானில் ஆஃப்பர் மழை.. கேப்விடாமல் ஷாப்பிங் செய்ய சரியான நேரம்..
ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்டது, பெரும்பாலானோர் இந்த மாத துவக்கத்திலேயே உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத் தொகையுடன், மளிகை பொருட்கள், வீடு உபயோக பொருட்கள் என்று சில பொருட்களை வாங்க தயாராக இருப்பீர்கள். கொஞ்சம் வெயிட் செய்யுங்கள்.. எதையும் உடனே வாங்கிவிடாதீர்கள்.
ஏனெனில், அமேசான் நிறுவனத்தின் அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2023 (Amazon Great Freedom Festival 2023) விற்பனை நாளை முதல் கோலாகலமாக துவங்குகிறது. அமேசான் தனது வரவிருக்கும் விற்பனையான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் தேதிகளை நேற்று வெளியிட்டது. முதலில் இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் துவங்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது இதன் தேதிகளை அமேசான் மாற்றியுள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், அமேசான் நிறுவனம் அதன் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2023 தேதிகளை திருத்தியுள்ளது. மேலும், இந்த விற்பனை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும் என்று நிறுவனம் இப்போது அறிவித்துள்ளது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை இ-காமர்ஸ் தளத்திலிருந்து ஒரு பெரிய விற்பனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இது பிரைம் டே விற்பனைக்கு சில வாரங்களுக்குப் பிறகு வருகிறது. அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் 2023 தேதி (Amazon Great Freedom Festival 2023 Date) இப்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பதிலாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனையை முன்கூட்டியே அணுக முடியும்.
இது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாள் விற்பனையாக இருக்கும். இது ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு இடையில் நடைபெறும் என்று முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி, பிளிப்கார்ட் தனது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days Sale 2023) விற்பனையை அறிவித்த பிறகு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் பற்றி பார்க்கையில், அமேசான் நிறுவனம் ஆஃபர்கள் மற்றும் டீல்கள் குறித்து ஒரு ஸ்னீக் பீக் தகவலை வெளியிட்டுள்ளது. அமேசான் தளத்தில் உள்ள அனைத்து முக்கிய தயாரிப்புகளின் மீதும் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் அளவில்லா சலுகைகளுடன் தயாரிப்புகள் நாளை முதல் கிடைக்கும்.
இத்துடன் இதில் நோ-காஸ்ட் EMI விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் என்ற ஸ்மார்ட்போன்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் / டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடியை பெறுவார்கள். OnePlus Nord CE 3 Lite 5G மற்றும் Realme Narzo N53 ஆகியவை இந்த ற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற கூடுதல் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்கள் ரூ.99 என்ற ஆரம்ப விலை முதல் வாங்க கிடைக்கும். இந்த சிறப்பு விற்பனையின் போது ஸ்மார்ட் டிவிகள் மற்றும் உபகரணங்கள் மீது 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
அமேசான் தளமானது இந்த விற்பனையின் போது, பிளாக்பஸ்டர் டீல்கள், கிராண்ட் ஓப்பனிங் டீல்கள், இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரையிலான டீல்களை வழங்கும். இதில் ரூ.999 விலைக்கு கீழ் உள்ள டீல்கள் மற்றும் ரூ. 5,000 வரை கேஷ்பேக் நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications








