ரூ.99 மட்டுமே.,80% தள்ளுபடி: ஆடை முதல் அணிகலன் வரை- அமேசான் சுதந்திர தின விற்பனை!
ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 (இன்று) முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையையும் இதே தினத்தில் அறிவித்துள்ளது. கடந்த முறை அமேசான் அறிவித்த பிரைம் தின விற்பனை சலுகையை தவற விட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். வழங்கப்படும் தள்ளுபடிகள் உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி அதன் விலை இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் பெஸ்டிவல் விற்பனையில் ஆடை முதல் அலங்கார சாதனங்கள் வரை அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் வழங்கும் பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

மொபைல்கள் மற்றும் அக்ஸசரிஸ்
அமேசான் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ், எம்ஐ போன்ற பல்வேறு பிராண்டுகளின் சாதனங்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சாதனங்களின் அக்ஸசரிஸ்களுக்கும் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் புதிய மொபைல் அல்லது அக்ஸசரிஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் மெமரி கார்டுகள், ஹெட்ஃபோன்கள் போன்ற பல்வேறு மின்னணு பாகங்களும் ரூ.99 முதல் கிடைக்கிறது. அமேசான் ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

தங்கள் குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வு நடைபெற இருந்தால் அதற்கு ஆடைகள் வாங்க அமேசான் சிறந்த தேர்வாகும். ஸ்டைலான ஆடை, நகைகள் மற்றும் ஹேண்ட் பேக் என அனைத்தும் வாங்கலாம். இதற்கு அதிக செலவிட தேவையில்லை சலுகைகளோடு வாங்கலாம். அமேசான் மேற்கத்திய உடைகள், அணிகலன்கள் மற்றும் ஹேண்ட் பேக்கிற்கு 80% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
அனைத்துக்கும் மேலாக ஒப்பனை சாதன பொருட்கள் வாங்க விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். தங்களுக்கு பிடித்த அழகு சாதன பொருட்களை மிகவும் மலிவு விலையில் வாங்கலாம். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் அழகு சாதன பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
தங்கள் வீட்டில் சில ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் வாஷிங் மெஷின் முதல் எல்இடி டிவி வரை பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுக்கு 55% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications