Home
News

அதிரடி தள்ளுபடி- உயர்தர ஸ்மார்ட்போன் விலையே இவ்வளவுதான்: அமேசான் சுதந்திர தின சலுகை!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் முதன்மைரக ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடிகளுடன் கூடுதலாக எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்பட்சத்தில் 10% தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

ஆன்லைன் விற்பனை தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்கள்

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 (இன்று) முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையையும் இதே தினத்தில் அறிவித்துள்ளது. கடந்த முறை அமேசான் அறிவித்த பிரைம் தின விற்பனை சலுகையை தவற விட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். வழங்கப்படும் தள்ளுபடிகள் உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.

முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள்

முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் தற்போது நேரலையில் இருக்கிறது. இந்த சலுகை தின விற்பனயில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருக்கும்பட்சத்தில் அதற்கு இது சரியான நேரமாகும். எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள் மூலம் ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் 10% தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,500 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 64 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இதில் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் திரவ குளிரூட்டும் அமைப்பு, 4400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்துக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ தற்போது கூப்பன் தள்ளுபடியுடன் ரூ.18,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி, 108 எம்பி குவாட் கேமரா அமைப்பு, 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே, டூயல் ஸ்பீக்கர் மற்றும் 5020 எம்ஏஎச் பேட்டரி போன்ற உயர்தர அம்சங்களை கொண்டிருக்கிறது.

டெக்னோ கேமன் 17 ப்ரோ

டெக்னோ கேமன் 17 ப்ரோ

டெக்னோ கேமன் 17 ப்ரோ சாதனத்துக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் எந்த விலைக்குறைப்பும் பெறவில்லை. ஆனால் ரூ.1,999 மதிப்புள்ள டெக்னோ பட்ஸ் 1 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்கள் ஜோடி இலவசமாக கிடைக்கும். டெக்னோ கேமன் 17 ப்ரோ மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது முழு எச்டி ப்ளஸ் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி பேனல் ஆதரவோடு வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 64 எம்பி முதன்மை கேமரா மற்றும் 48 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ 7 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 48 எம்பி முதன்மை கேமராவோடு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival 2021: Top Offers and Deals For Flagship Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X