ஸ்மார்ட்போன் விலைக்கு கிடைக்கும் லேப்டாப்- மலிவு விலையில் லேப்டாப்: அமேசான் சுதந்திர தின சலுகை!

|

பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 (இன்று) முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. கடந்த முறை அமேசான் அறிவித்த பிரைம் தின விற்பனை சலுகையை தவற விட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். வழங்கப்படும் தள்ளுபடிகள் உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன. கூடுதலாக அமேசான் இந்த சலுகை தின விற்பனையில் வங்கி தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன் விலைக்கு கிடைக்கும் லேப்டாப்- அமேசான் சுதந்திர தின சலுகை!

கொரோனா பரவல் தொடங்கியது பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கின. மேலும் பல்வேறு நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை நீடித்தது. பலரும் தங்களது வேலையை இழந்து ஆன்லைன் பணியை தேடி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் வேலை என பல்முறை நடைமுறைகள் செயலுக்கு வந்துள்ளது. இதற்கு லேப்டாப் பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் குறைந்த விலை லேப்டாப்கள் குறித்து பார்க்கலாம்.

எச்பி க்ரோம்புக் 14ஏ-என்ஏ0003டியூ 14 இன்ச் லேப்டாப் ஆனது ரூ.29,741 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த லேப்டாப் ஆனது ரூ.26,977 என விற்பனைக்கு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது மிகவும் மெல்லிய மற்றும் லைட் டச் ஸ்க்ரீன் வடிவமைப்போடு வருகிறது. இதில் இன்டெல் 4020 4ஜிபி 64ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.

ஸ்மார்ட்போன் விலைக்கு கிடைக்கும் லேப்டாப்- அமேசான் சுதந்திர தின சலுகை!

அவிட்டா எசன்ஷியல் ரெஃப்ரெஷ் என்இ 14ஏ2இன்சி44ஏ லேப்பின் விலை ரூ.45,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.21,799 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப்பானது முழு எச்டி டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு வருகிறது. இது மேட் பிளாக் பினிசிங் வடிவமைப்போடு வருகிறது.

டெல் வோஸ்ட்ரோ 3405 லேப்டாப் ஆனது 35.66 செமீ அளவு டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த லேப்டாப்பானது ரூ.27,990-க்கு கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது விண்டோஸ் 10+ எம்எஸ்ஓ பிளாக் ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் எச்டி ஏஜி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.

எச்பி 255ஜிபி லேப்டாப் ஆனது ரூ.41,075 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.36,990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஆதரவோடு வருகிறது. இது டார்க் ஆஷ் பிளாக் வண்ண விருப்பம் மற்றும் ஒரு வருட வாரண்டியோடு வருகிறது.

ரூ.53,999 என்ற விலையில் விற்கப்பட்ட லைஃப் டிஜிட்டல் லேப்டாப் ஆனது ரூ.34,990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச், இன்டெல் கோர் ஐ7, 8 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இது 512 ஜிபி சேமிப்பு ஆதரவோடு விண்டோஸ் 10 இயக்கமுறைமையில் இயக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon great freedom festival 2021: Laptops can be buy at the Best Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X