Amazon Great Freedom Festival 2021: பெஸ்டான லேப்டாப் ரூ. 34000 சலுகையுடன்.. கேமிங் லேப்டாப் கூட இருக்கு..
அமேசான் நிறுவனத்தின் சுதந்திர தின சிறப்பு விற்பனை தற்பொழுது நேரடியில் உள்ளது, இது ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சிறந்த ஒப்பந்தங்களை டன் கணக்கில், ஏராளமான பிரிவுகள் மூலம் அட்டகாசமான சலுகை மற்றும் தள்ளுபடிகளை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த விற்பனையில் தற்பொழுது லேப்டாப்கள் மீது ரூ. 30,000-க்கும் மேல் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும், கேமர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.

புதிய லேப்டாப்களை அதிக விலை வீழ்ச்சியுடன் பெற இதுவே சரியான நேரம். நீங்கள் லேப்டாப் இன்றி மற்ற வகைகளில் ஒப்பந்தங்களைத் தேடுகிறீர்கள் அதற்கும் இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான சலுகைகள் கிடைக்கிறது. ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற அனைத்து சாதனங்களுக்கும் சிறந்த ஒப்பந்தங்களின் பட்டியலை நீங்கள் எங்கள் கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் ஃப்ரீடம் டே சேல்ஸ் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் பல சலுகைகள், வட்டி இல்லா தவணைத் திட்டம் போன்ற சலுகைகளுடன், அமேசான் வழங்கும் தள்ளுபடியுடன் சாதனத்தின் விலை இதுவரை குறையாத அளவிற்கு குறைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சரி, இப்போது சிறந்த லேப்டாப் சலுகை பற்றி இப்போது பார்க்கலாம்.
1. எச்பி ரைஜென் 5 5600H லேப்டாப் மற்றும் சலுகை (HP Ryzen 5 5600H 16.1-inch(40.9 cm))
இந்த எச்பி ரைஜென் 5 5600H லேப்டாப் எச்பி நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இது ஒரு கேமிங் லேப்டாப் ஆகும். சிறந்த கேமிங் அனுபவத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த கேமிங் லேப்டாப் 16.1 இன்ச் கொண்ட FHD டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8GB ரேம் மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் உடன், 4GB GTX 1650 கிராபிக்ஸ் அம்சத்துடன் வருகிறது.

இது ஃபிலிக்கர் ஆகாத டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் Windows 10 மற்றும் MS Office உடன் மைக்கா சில்வர் நிறத்தில் வருகிறது. இதன் அசல் விலை அமேசான் பட்டியலின் படி ரூ. 78,035 விலையை காட்டுகிறது. ஆனால், சிறப்பு விற்பனையை முன்னிட்டு தற்பொழுது 14% தள்ளுபடியுடன் ரூ. 11,045 விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ. 66,990 விலையில் வாங்க கிடைக்கிறது. கேமிங் லேப்டாப் வாங்க இது நல்ல சலுகையாகும்.
2. எல்ஜி கிராம் அல்ட்ரா லிகட் 11வது ஜென் கோர் i5 1035G7 லேப்டாப் (LG Gram Ultra-Light 11th Gen Core i5)
எல்ஜி கிராம் அல்ட்ரா லிகட் 11வது ஜென் கோர் i5 1035G7 லேப்டாப் சாதனம் 15 இன்ச் கொண்ட IPS புள் எச்டி டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது 8GB ரேம் மற்றும் 256GB SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த லேப்டாப் Windows 10 அடிப்படை கொண்ட 64-bit ஓஎஸ் இல் இயங்குகிறது.

இது டார்க் சில்வர் நிறத்தில் தற்பொழுது ரூ. 69,990 சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் உங்களுக்கு 33% தள்ளுபடியுடன் ரூ. 34,010 விலையை அதன் அசல் விலையில் இருந்து குறைத்து வழங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் அதிகப்படியான சலுகை என்று இதற்கு நான் கூறலாம்.
மேலும், அமேசான் சிறப்பு விற்பனை பற்றிய அப்டேட் செய்திகளை அறிந்துகொள்ள கிஸ்பாட் சேனலுடன் இணைந்திருங்கள். இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போனுக்கான சலுகை மற்றும் தள்ளுபடி, சிறந்த ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகை மற்றும் தள்ளுபடி பற்றி அறிந்துகொள்ள எங்களின் சிறப்பு கட்டுரைகளை படிக்க மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications