ரூ.6,799-க்கு அட்டகாச ஸ்மார்ட்போன்- அமேசான் சுதந்திர தின சலுகை: பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!
பொதுவாக ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளமாகும். அதன்படி தற்போது ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை தினத்தை அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது ஆகஸ்ட் 5 (இன்று) முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையையும் இதே தினத்தில் அறிவித்துள்ளது. கடந்த முறை அமேசான் அறிவித்த பிரைம் தின விற்பனை சலுகையை தவற விட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். வழங்கப்படும் தள்ளுபடிகள் உடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி அதன் விலை இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.8,499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.6,799 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது.

ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.
அதேபோல் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள ரெட்மி 9 ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரெட்மி 9 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999 ஆக இருக்கிறது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ கோர் மூலம் இயக்கப்படுகிறது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ.15,999 ஆக இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த அம்சமாக 48 எம்பி சோனி சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரூ.15,999 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.13,499 என விற்பனைக்கு கிடைக்கிறது.
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் இந்த சாதனம் ரூ.10,999-க்கு கிடைக்கிறது. அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகையும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications