Home
News

பட்டைய கிளப்பும் அமேசான் ஓணம் சேல்.. மலிவு விலையில் ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.. கொத்தா தூக்குவீங்க..

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஓணம் சேல் (Amazon Grand Onam Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மர்ட் டிவி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமேசான் கிரேட் ஓணம் சேல் ஆனது வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் ஆனது மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த ரெட்மி டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.. கொத்தா தூக்குவீங்க..

எனவே 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலை ரூ.10,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு உடனடியாக 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியை தற்போது மலிவு விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவியின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

இந்த ரெட்மி டிவி 32 இன்ச் (1366×768 பிக்சல்கள்) எச்டி ரெடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், 96.9 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேசியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது மெட்டல் பெசல் லெஸ் ஸ்கிரீன் கொண்ட டிவியாகும். இந்த டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7) கொண்ட குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி வாய்ஸ் ரிமோட் (Redmi Voice Remote) வருகிறது. இந்த ரிமோட்டில் அலெக்சா (Alexa), பிளே பேக் கன்ட்ரோல் (Play Back Controls), சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) ஆகிவற்றின் சார்ட்கட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிமோட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

10W கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மலிவு விலையில் ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.. கொத்தா தூக்குவீங்க..

ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), ப்ளூடூத் 5.0, வை-பை 802.11 ஏசி போன்ற கனெக்டிவிட்டி இருக்கிறது. அதோடு ஒரு எச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எதர்நெட் (Ethernet), ஆன்டெனா (Antenna) உடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட் டிவி.

கடந்த மார்ச் மாதம் இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது ரூ.13,999-க்கு விற்பனைக்கு வந்ததது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் இந்த டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங், எல்ஜி, சோனி, சியோமி உள்ளிட்ட பல்வேறு டிவிகளுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Grand Onam Sale: 51 percent off on Redmi Smart LED Fire TV: check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X