அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை!

  ஆகஸ்ட் மாதம் வந்தாச்சு! இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகிவிட்டோம். அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை நான்கு நாட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வழங்கி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 20,000 பொருட்களைத் தள்ளுபடி விலையில் விற்பதற்கு அமேசான் தயாராக உள்ளது.

  ஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.!

  அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை!

  இந்த விற்பனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 11.59 வரை இருக்கும். இந்த விற்பனையின் பொழுது அமேசான் புதிய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதோடு, Huawei, Honor, Samsung, Vivo, RealMe, 10.Or போன்ற புகழ்ப் பெற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களையும் விற்கிறது.

  கேவலமான வரலாற்று துரோகம் : தகுதியே இல்லாதவர்களுக்கு பெயரும் புகழும்.!

  SBI வங்கியின் கிரடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் பொருட்களின் மீது கூடுதலாக 10% கேஷ் பேக் ஆஃபரும் உண்டு. சில குறிப்பிட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கு மாதத் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் உண்டு. Amazon Echo devices, Fire TV Stick and Kindle e-readers ஆகியவற்றறையும் இந்த சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி விலையில் பெறலாம்.

  அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை!

  “ இந்திய மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற நிறுவனமாகத் திகழும் அமேசான், அனைத்துச் சிறப்பு தினங்களையும் வாடிக்கையாளர்களோடு சேர்ந்து கொண்டாட விரும்புகிறது. இந்தக் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு எது தேவையோ அவற்றைத் தள்ளுபடி விலையில் வழங்குகிறது.

  புதிய பொருட்கள், சிறந்த சலுகைகள், ரொக்கமாகப் பணம் திரும்பப் பெறும் சலுகை, வட்டியில்லா மாதத் தவணை முறை, எக்சேஞ்ச் வசதி போன்றவற்றோடு இந்தச் சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட அமேசான் காத்திருக்கிறது” என்கிறார், அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனீஸ் திவாரி.

  அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை!

  ஏற்கனவே இந்த ஆண்டு ஜீலை மாதத்தில் இரண்டாவது 'Prime Day’ விற்பனையை நடத்தி முடித்திருக்கிறது அமேசான் நிறுவனம். இந்த விற்பனை 17 நாடுகளில் ஜீலை 16, 17 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் கேலி செய்கிறாரா ? அல்லது புதிய கண்டுபிடிப்புக்கு விளம்பரம் செய்கிறாரா?

  அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெஜோஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படத்தினை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பல யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது. "சக்கரத்தின் மேல் நகரும் அலெக்ஸா (Alexa-on-wheels)," எனச் சொல்லத் தக்க வகையில் இருந்த அந்தப் படத்தின் மூலம் பெஜோஸ் சொல்ல வரும் செய்தி என்ன என்பதுதான் குழப்பமாக உள்ளது. மின் வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் நிறுவனமான அமேசான், வீட்டு வேலைகளுக்கு உபயோகமாக இருக்கும் ரோபோவைத் தயாரித்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறதா என எண்ணத் தோன்றும் வகையில் அந்தப் பதிவு இருந்தது.

  தூசு மற்றும் குப்பை

  வீட்டில் உள்ள தூசு மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யும் வட்ட வடிவ ரோபோ இயந்திரத்தின் மீது அலெக்ஸா ஸ்பீக்கரைப் பொருத்தி அதனைச் சுற்றி நீல நிற டேப்களை ஒட்டவைத்துள்ள காட்சிதான் இன்ஸ்டாகிரமில் பதிவிடப்பட்டு இருந்தது. அவருடைய குழந்தைகள் செய்த குறும்புத்தனமான வேலையா? அல்லது தன்னுடைய கம்பெனியின் புது ரோபோ தயாரிப்புக்கான முன்னோட்ட விளம்பரமாக இதைப் பதிவிட்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை

  லைஃப் வித் போர் கிட்ஸ்

  ஜெப் பெஜோஸ் "நான் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள அறையில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். எனக்கு இதைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை" என்று ஜெப் பெஜோஸ் அந்தப் படத்தின் கீழ் பதிவிட்டிருந்தார். லைஃப் வித் போர் கிட்ஸ் (#LifeWithFourKids) என்னும் ஹேஸ்டேக்கில் இந்தப் பதிவை ஜெப் பெஜோஸ் செய்திருந்தார்.

  தி வாஷிங்டன் போஸ்ட்

  உலகின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெஜோஸ், அமேசான் நிறுவனம் மட்டும் அல்லாமல், புளு ஆர்ஜின் (Blue Origin) என்னும் தனியார் விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அமெரிக்காவின் பழமையான பத்திரிகை நிறுவனமான தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பங்குகளின் பெரும் பகுதி இவரிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

  எக்கோ ரோபோ

  எக்கோ ரோபோ அமேசான் நிறுவனம் புதிய மொபைல் எக்கோ ரோபோவை (mobile Echo robot) தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக புளும்பொ்க் நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது

  லெக்ஸாவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்

  பெஜோஸ் ஜெப் பெஜோஸ் தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக ஏதேனும் ஒரு புதிய பொருளை வெளியிடுவதற்கான குறிப்பினை இப்பதிவின் மூலம் உலகுக்கு அறிவித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "அலெக்ஸாவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதனை எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இயக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்தைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என ஜெப் பெஜோஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் மொபைல் போன் வெளியிடும் திட்டமும் இவரிடம் இருப்பதாகத் தெரிகிறது.

  ஜெப் பெஜோஸின் குழந்தைகள்

  அறையைச் சுத்தம் செய்யும் அல்லது ஜெப் பெஜோஸின் குழந்தைகள், அறையைச் சுத்தம் செய்யும் Roomba ரோபோவையும் அலெக்ஸாவையும் இணைத்து விளையாட்டுக்காக அவ்வாறு செய்திருக்கலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Amazon Freedom Sale Get phones from Samsung OnePlus Vivo Honor and others at discount: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more