அமேசான்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி முதல் வாஷிங்மெஷின் வரை அதிரடி விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைதளத்தை விட அமேசான் வலைதளத்தில் கூடுதல் சலுகை மற்றும் எண்ணற்றப் பொருட்கள் கிடைக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் அமேசான் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின சிறப்பு விற்பனை
இந்நிலையில் அமேசான் வலைதளத்தில் சுதந்திர தின சிறப்பு விற்பனை விரைவில் தொடங்குகிறது, குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு தயாரிப்புளுக்கு 80சதவிகிதம் வரை
தள்ளுபடி விலையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

80சதவிகிதம் வரை தள்ளுபடி
அமேசான் வலைதளத்தில் freedom sale எனும் தலைப்பில் தான் இந்த விலைகுறைப்பு சலுகை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணினி உட்பட பல்வேறு பொருட்களுக்கு 80சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 8-ம் தேதி
மேலும் இந்த சலுகைகள் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று துவங்குகிறது, ஆனால் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே சலுகை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 11-ம் தேதி முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன், டிவி
விரைவில் ஸ்மார்ட்போன், டிவி, வாஷிங்மெஷின் உட்பட அனைத்து பொருட்களுக்கும் எவ்வளவு விலைகுறைப்பு என்பதை அமேசான் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்மார்ட்போன்களுக்கு 6ஆயிரம் வரை எக்ஸ்சேஞ் ஆஃபர் வழங்கப்படும் என்றும்,பிரீமியம் போன்களுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்த் தகவல் வெளிவந்துள்ளது.

வாஷிங்மெஷின்கள்
குறிப்பாக டிவி, மிக்ஸி, கிரேண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 60சதிவிகிதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதில் வாஷிங்மெஷின்கள் 11-ஆயிரம் ரூபாய் ஆஃபரில் விற்கப்படுகிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

70சதவிகிதம் தள்ளுபடி
ஆடை, ஆபரணங்கள் பேஷன் தயாரிப்புகளுக்கு 80சதவிகிதம் வரை தள்ளுபடியும், டீதூள், எண்ணெய் போன்ற பலசரக்கு பொருட்களுக்கு 70சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications