அமேசான் பிரீடம் சேல் ஆரம்பம்: 40% தள்ளுபடியில் பொருட்களை அள்ளிக்கலாம்.!
அமேசான் நிறுவனம் இந்திய சுதந்திர தினம் கொண்டாடத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி நாட்களாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 40 சதவீதம் தள்ளுபடியில் அமேசான் நிறுவனத்தில் ப
அமேசான் ஆன்லைன் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனத்தில் ஒன்று. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோர்களுக்கு பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 72ம் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமேசான் நிறுவனம் ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

4 நாள் தள்ளுபடி அறிவிப்பு:
அமேசான் நிறுவனம் இந்திய சுதந்திர தினம் கொண்டாடத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி நாட்களாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 40 சதவீதம் தள்ளுபடியில் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை வாங்க முடியும்.

அமேசான் பிரீடம் சேல்:
எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியில் வாங்கும் பொருட்களுக்கு வட்டி இல்லை. பொருட்கள் சேதம் அடைந்து இருந்தாலும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. முன்னணி விற்பனையில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அமேசான் பிரீடம் சேலில்ல மட்டும் வழங்கப்படுகிறது.

ஒன் பிளஸ்6:
64 ஜிபி உள்ள ஒன் பிளஸ் 6 போன் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது. இந்த போனுக்கு எக்ஸ்சேஞ் ஆப்பரில் போனை மாற்றி ஒன் பிளஸ் 6 போனை பெறுவோருக்கு ரூ.8084 விலை குறைக்கப்படுகிறது.

ஓப்போ ரியல்மி 1:
ஓப்போ ரியல்மி போன் வாங்குவோர்களுக்கும் சிறப்பு 8,084 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்சேஞ் ஆப்பரிலும் ரியல்மி போனை பெறலாம். 3ஜிபி ரேம் கொண்ட ஓப்போ ரியல்மி 1 போனை ரூ.8990க்கு பெறலாம்.

மோட்டோ ஜி 6:
பிரீடம் சேல் வாரத்தில் 64 ஜிபி கொண்ட மோட்டோ ஜி6 போனை ரூ.15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ் ஆப்பரில் இந்த போனை வாங்கினால், ரூ. 8,805க்கு விற்கப்படுகிறது.

நோக்கியா 6.1:
இந்த தள்ளுபடி விற்பனையில் நோக்கிய 6.1 போன் ரூ. 20,095க்கு விற்கப்படுகிறது. இந்த போனுக்கும் மேலும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் பல்வேறு பொருட்களும் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications