சொத்து மதிப்பில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ்.! 200பில்லியன் டாலர்.!

|

200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் நபராக மாறியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவர்கள். அதன்படி 56 வயதான அவர் தற்போது 205 பில்லயன் டாலர் மதிப்புடையவர். குறிப்பாக உலகின் இரண்டாவது பணக்காரரான பில் கேட்ஸை விட கிட்டத்தட்ட 89பில்லியன் டாலர் அதிகம் ஆகும்.

பெசோஸின் நிகர மதிப்பு

தற்போது பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 116.2பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது, பெசோஸின் நிகர மதிப்பு
ஜனவரி 1-ம் தேதி சுமார் 115பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் உயர்வுக்கு காரணம்,கொரோனா ஊரடங்கால் மக்கள்

இவரின் சொத்துமதிப்பு திடீர் உயர்வுக்கு காரணம்,கொரோனா ஊரடங்கால் மக்கள் முழுமையாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் இணையவழி வர்த்தகம் அதிகரித்ததே காரணமாக சொல்லப்படுகிறது.

பேஸ்புக் மூலம் பழக்கம்.. வீடியோ கால்லில் உல்லாசம்.. வந்தது சிக்கல்.. பறிபோனது பணம்!பேஸ்புக் மூலம் பழக்கம்.. வீடியோ கால்லில் உல்லாசம்.. வந்தது சிக்கல்.. பறிபோனது பணம்!

அமேசான் நிறுவனத்தைத் தவிர்த்து

குறிப்பாக அமேசான் நிறுவனத்தைத் தவிர்த்து வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல நிறுவனங்களிலும் ஜெப்பெசோஸ் முதலீடு செய்துள்ளார் என்ப குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் நிறுவனமும் பல்வேறு புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

கழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்!<br />கழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்!

ஜெப் பெசோஸிற்கும் அவரது

கடந்த ஆண்டு ஜெப் பெசோஸிற்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்தது, அதில் அவர் நஷ்ட ஈடக அமேசான்நிறுவனத்தின் 25சதவிகித பங்குகளை மனைவிக்கு அளித்தார். மேலும் இந்த விவாகரத்து நடந்திருக்காத பட்சத்தில் அவரதுசொத்து மதிப்பு இன்று பல மடங்குகள் உயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் தளத்தில் அதிரடி சலுகை அறிவிப்பு.!ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்: பிளிப்கார்ட் தளத்தில் அதிரடி சலுகை அறிவிப்பு.!

 25சதவிகித பங்குகளைப்

அதேபோல் ஜெப்பிடம் 25சதவிகித பங்குகளைப் பெற்ற அவரது மனைவி உலக பணக்காரர் பட்டியலில் 14இடத்திலும், பின்புஉலக பணக்காரப் பெண்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! சில நாட்களுக்கு மட்டுமே.!இந்தியா: ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! சில நாட்களுக்கு மட்டுமே.!

இதுவரை உலகில் யாருடைய சொத்து

சுருக்கமாக இதுவரை உலகில் யாருடைய சொத்து மதிப்பும் 200பில்லியன் டாலரை கடந்தது இல்லையாம், உலக வரலாற்றில்முதல் முறையாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலரைக் கடந்து இருக்கிறது.

பெசோஸ் அவர்களை தொடர்ந்து பேஸ்புக்

ஜெஃப் பெசோஸ் அவர்களை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் 115பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், பின்பு யாருமே எதிர்பார்க்காத டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் 101பில்லியன் டாலருடன் நான்கவது இடத்தில இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon Founder and CEO Jeff Bezos becomes first person ever to be worth over USD 200 billion: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X