உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி!

|

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அமெரிக்க உணவு வங்கிகளுக்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

100 மில்லியன் டாலர் நன்கொடை

100 மில்லியன் டாலர் நன்கொடை

அமெரிக்க உணவு வங்கிகளுக்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்ததாவது, நாட்டின் உணவு வங்கிகளில் முன் வரிசையில் இருப்பவர்களுக்கும், உணவுக்காக அவர்களை நம்பியிருப்பவர்களுக்கும் @FeedingAmerica-க்கு 100 மில்லியன் டாலர் ஆதரவளிக்க விரும்புவதாக பெசோஸ் அறிவித்துள்ளார்.

உணவுக்கு தட்டுபாடு வராமல் இருக்க நன்கொடை

உணவுக்கு தட்டுபாடு வராமல் இருக்க நன்கொடை

மேலும் பல உணவகங்களில் உணவு தானம் செய்யப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பதற்றம் காரணமாக சமூகவிலகலை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது அனைத்து நாடுகளும் உள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் மூடியுள்ளது அதன் காரணமாக உணவு வங்கி சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக ஜெப் பெசோஸ் தெரிவித்தார்.

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

நன்கொடை மீதான விமர்சனம்

நன்கொடை மீதான விமர்சனம்

ஜெப் பெசோஸ் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு பலரால் பாராட்டுப்பட்டு வந்தாலும், அவருக்கு கிட்டத்தட்ட 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது எனவும் அதில் அவர் தற்போது அறிவித்துள்ள நிதி என்பது 0.8 சதவீதம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நன்கொடைக்கு ஆழ்ந்த நன்றியுணர்வு

நன்கொடைக்கு ஆழ்ந்த நன்றியுணர்வு

பெசோஸ் இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் பீடிங் அமெரிக்கா, அமேசான் நிறுவனர் அறிவித்துள்ள இந்த தாராள பரிசுக்கு ஆழ்ந்த நன்றியுணர்வு என்று தெரிவித்துள்ளது. தற்போது வேலை வாய்ப்பின்றி பொருளாதார தத்தளிப்பில் சிக்கி உணவுக்கு கூட பஞ்சம் நிலவி வருகிறது.

அண்டை நாடுகளுக்கு அதிக உணவு வழங்க முடியும்

அண்டை நாடுகளுக்கு அதிக உணவு வழங்க முடியும்

இந்த நெருக்கடி நேரத்தில் உணவு பற்றாக்குறையில் இருக்கும் அண்டை நாடுகளுக்கு அதிக உணவை வழங்க இந்த அறிவிப்பு உதவும் என்றும் இதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் பீடிங் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக அறிவித்த அமேசான்

முன்னதாக அறிவித்த அமேசான்

சில தினங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸால் வேலை இழந்தவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்தார்.

அனைவருக்கும் முதல் விருப்பம் அமேசான் தான்

அனைவருக்கும் முதல் விருப்பம் அமேசான் தான்

கொரோனா பாதிப்பு ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அனைவருக்கும் முதல் விருப்பம் அமேசான் தான். உலகின் ஆன்லைன் ஷாப்பிங் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெரோஸ் அவர்கள், கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்றால் மிகப் பெரிய பாதிப்பு

கொரோனா நோய் தொற்றால் மிகப் பெரிய பாதிப்பு

அவர் தெரிவித்தது என்வென்றால், உலகப் பொருளாதாரம் இந்த கொரோனா நோய் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது, இதனால் உலகின் எல்லா தொழல்துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி அளவு குறைவாகவே உள்ளது.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அமேசான்

அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அமேசான்

குறிப்பாக நோய்தொற்று காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருக்கின்றனர், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மக்கள் எங்களை போன்ற ஆன்லைன் நிறுவனங்களைத் தான் நம்பி இருக்கின்றனர். எங்களுக்கும் அந்த பொறுப்பும், பயமும் இருக்கிறது.

 ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவால்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவால்

ஆனால் எந்த ஒரு பொருளும் அதே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அதே நாட்டில் விற்கப்படுவதில்லை, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்போது பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்து அதிகமாக முடக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்புசில்லரை விலையில் அட்டகாச திட்டங்கள்: Jio அதிரடி அறிவிப்பு

நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவை

நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவை

இந்த இக்காட்டான சூழலில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய எங்கள் ஊழியர்கள் தவறியதில்லை, எங்கள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக கூறினார்.

Best Mobiles in India

English summary
amazon founder jeff bezos announces 100 million dollor due to corona impact

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X