அழுவதா., சிரிப்பதா?- இதை செய்தால் உங்க அக்கவுண்ட்ல ரூ.3.72 லட்சம் இருக்கும்: அமேசான் ஜெப் பெசோஸ் வைத்த செக்!

|

அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு "பே டு க்விட்" என்ற போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் சுமார் 3 லட்சம் வரை போனஸ் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மெயில் அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெசோஸ் அந்த தலைப்பில் "தயவுசெய்து இந்த சலுகையை ஏற்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

"பே டூ க்விட்" என்ற போனஸ்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இதுகுறித்து கூறுகையில், பணியாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் $2000 முதல் $5000 வரை போனசாக பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். பணியாளர்கள் இந்த போனஸை எடுக்க முடிவு செய்தால், அமேசானில் மீண்டும் வேலை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரையும் சிறிது நேரம் இதுகுறித்து சிந்தித்து ஊக்கத்தோடு செயல்பட வைப்பதே இதன் நோக்கமாகும். அமேசான் தற்போது அறிவித்த சலுகையானது "பே டூ க்விட்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெப்பெசோஸ் வெளியிட்ட தகவல்

ஜெப்பெசோஸ் வெளியிட்ட தகவல்

அமேசான் நிறுவனம் ஜெப்பெசோஸ் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். அமேசான் நிறுவனரின் நோக்கம் அனைத்து ஊழியர்களையும் சிறிது நேரம் ஒதுக்கி சிந்திக்க வைத்து ஊக்குவிப்பதே ஆகும். தங்களது ஊழியர்கள் உண்மையாக என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதே ஆகும். அமேசான் கிடங்குகளில் இருக்கும் முழு நேர ஊழியர்களுக்கு மட்டுமே இந்த பே டூ க்விட் போனஸ் சலுகை பொருந்தும், கிடங்குகளில் இருக்கும் முழு நேர ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேறும்பட்சத்தில் சுமார் $2000 முதல் $5000 டாலர் வரை போனஸ் வழங்கப்படும் அதாவது 5000 டாலர் என்று பொருட்கொள்ளும்பட்சத்தில் இந்திய மதிப்பில் சுமார் 3.72 லட்சம் வரை ஆகும். இந்த போனஸை ஏற்று பணியாளர்கள் வெளியேறும் பட்சத்தில் இந்த பணம் வழங்கப்படும் ஆனால் மீண்டும் அமேசானில் வேலை செய்யவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவதா இல்லை வருத்தப்படுவதா

ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவதா இல்லை வருத்தப்படுவதா

இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைவதா இல்லை வருத்தப்படுவதா என்பதை அறியாமல் திகைப்பில் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பில் தலைப்பில் "தயவுசெய்து இந்த சலுகையை ஏற்க வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கள் ஊழியர்கள் தங்களுடனே இருக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்று அறியவும் அவர்களை சிந்திக்க வைத்து ஊக்குவிப்பதே குறிக்கோள் எனவும் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நீண்ட காலமாக ஒரு ஊழியர் அவர்கள் இருக்கு விரும்பாத இடத்தில் நீடிப்பது பணியாளருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஆரோக்கியமானதல்ல எனவும் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

ப்ளு ஆர்ஜின் என்னும் தனியார் நிறுவனம்

ப்ளு ஆர்ஜின் என்னும் தனியார் நிறுவனம்

உலக பில்லியனர்கள் பட்டியலில் ஏணையோர் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதில் தற்போதைய காலக்கட்டத்தில் பிரதான இருவர் குறித்து பார்க்கையில் ஒருவர் எலான் மஸ்க், மற்றொருவர் ஜெப் பெசோஸ். எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்று நிறுவனங்களும், ஜெப் பெசோஸ் அமேசான், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்களும் கொண்டுள்ளனர். ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ்

அமெரிக்க பத்திரிகை பரோன் "அமேசான்.பாம்ப்" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அமேசான் பங்கு வீழ்ச்சியடையும் எனவும் நிறுவனம் தங்கள் சொத்து பொருட்களை நேரடியாக விற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை மற்றொரு இடைத்தரகர் எனழும் நிராகரித்துள்ளது. அதோடு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் புதிய வணிக முன்னதாரணத்திற்கு முன்னோடியாக இருப்பார என்ற கருத்து முட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளது. கட்டுரை வெளியாகி சரியாக இரண்டு தசாப்தங்களில் அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன் மதிப்புடையதாக உயர்ந்ததோடு ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். பழைய கட்டுரையை பெசோஸ் தற்போது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் பகிர்ந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Amazon Founder Jeff Bezos Announced Pay To Quit Bonus For Employees: Dont take this Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X