"எனது 5 வயது கனவு": தம்பியோடு விண்வெளிக்கு செல்லும் ஜெஃப் பெசோஸ்- அடுத்தடுத்து டுவிஸ்ட்!

|

உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், தனக்கு ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என கனவு கண்டதாக குறிப்பிட்டார். ஜெஃப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவரது அவரது சகோததர் மார்க்கும் செல்கிறார். இந்த பயணம் ஜூன் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலே செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் நீடிக்கும்.

10 நிமிடம் விண்வெளி பயணம் என தகவல்

10 நிமிடம் விண்வெளி பயணம் என தகவல்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து வயது முதல் கனவு

ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

புதிய தலைமை செயல் அதிகாரி

புதிய தலைமை செயல் அதிகாரி

அமேசான் வெப் சர்வீஸ் தலைவராக இருக்கும் ஆண்டி ஜாஸ்ஸி, அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க உள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் க்ளவுட் கம்ப்யூட்டிங் வணிக வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருந்தவர். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். பதவியேற்பு விழா கூடிய விரைவில் நடைபெறும் நிலையில் பெசோஸ் விண்வெளிக்கு பறக்க இருக்கிறார்.

அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின்

அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின்

ஜெப் பெசோஸ்., அமேசான், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்களை கொண்டுள்ளார். ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்க செல்ல வைக்க திட்டம்

மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்க செல்ல வைக்க திட்டம்

ப்ளு ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி ஓடங்களையும், விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (என்எஸ்) என்ற பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்து வருகிறது.

அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்

அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்

விண்வெளிக்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட் என்பவரின் நினைவாக ராக்கெட்டுக்கு நியூ செப்பர்டு (என்எஸ்) என பெயரிடப்பட்டுள்ளது. பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட என்எஸ் ரக ராக்கெட் தொடர்ந்து ஏணைய வெற்றிகளை சந்தித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Founder Jeff Bezos and His Brother Flying to Space Next Month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X