பெருமையோடு டுவிட் போட்ட பெசோஸ்: "நீங்க நம்பர் 2 பாஸ்"- பெசோஸை நேரடியாக வம்புக்கு இழுத்த மஸ்க்!

|

ஜெஃப் பெசோஸ் மற்றொரு இடைத்தரகர் எனவும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை ஒரு புதிய வணிகத்திற்கு முன்னுதாரணமாகவும் முன்னோடியாகவும் கருதுவது முட்டாள்தனமானது என தெரிவிக்கப்பட்ட கட்டுரையை பெசோஸ் தற்போது பகிர்ந்துள்ளார். அமேசானில் தோல்வி அடையும் என்று தெரிவித்த பழைய கட்டுரையை ஜெஃப் பெசோஸ் பகிர்ந்து கொண்ட நிலையில், அதற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

"அமேசான்.பாம்ப்" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி

அமெரிக்க பத்திரிகை பரோன் "அமேசான்.பாம்ப்" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அமேசான் பங்கு வீழ்ச்சியடையும் எனவும் நிறுவனம் தங்கள் சொத்து பொருட்களை நேரடியாக விற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை மற்றொரு இடைத்தரகர் எனழும் நிராகரித்துள்ளது. அதோடு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் புதிய வணிக முன்னதாரணத்திற்கு முன்னோடியாக இருப்பார என்ற கருத்து முட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன்

அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன்

கட்டுரை வெளியாகி சரியாக இரண்டு தசாப்தங்களில் அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன் மதிப்புடையதாக உயர்ந்ததோடு ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். பழைய கட்டுரையை பெசோஸ் தற்போது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் பகிர்ந்துள்ளார்.

அமேசானை தோல்வி நிறுவனம் என்று குறிப்பிட்ட பழைய கட்டுரை

ஜெஃப் பெசோஸ் அமேசானை தோல்வி நிறுவனம் என்று குறிப்பிட்ட பழைய கட்டுரை உடன், ஊக்கமளிக்கு வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். அதில் "கேளுங்கள் மற்றும் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் யார் என்பதை யாரும் சொல்ல வேண்டாம். அமேசானின் தோல்வியை முன்னறிவித்த பல கதைகளில் இதுவும் ஒன்று. இன்று அமேசான் உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட இரண்டு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெஃப் பெசோஸ் டுவிட்டரில் பதிவிட்ட பதிவு

ஜெஃப் பெசோஸ் டுவிட்டரில் பதிவிட்ட பதிவு

ஜெஃப் பெசோஸ் டுவிட்டரில் பதிவிட்ட பதிவு 13000-த்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றிருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் கருத்துக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்தாலும் அவரது இணை போட்டியாளரான எலான் மஸ்க் அவரது டுவிட்டுக்கு பதிவிட்ட டுவிட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெஃப் பெசோஸ் டுவிட்டுக்கு மஸ்க் பதில்

ஜெஃப் பெசோஸ் டுவிட்டுக்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், சில்வர் பதக்க இமோஜியுடன் நம்பர் 2 என டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தாலும் பலரும் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எலான் மஸ்க் ஏன் பெசோஸ் டுவிட்டுக்கு நம்பர் 2 என்ற சில்வர் பதக்கத்தை பதிவிட்டு பதிலளித்துள்ளார் என்ற கேள்வி வரலாம். அதற்கான பதிலை பார்க்கலாம்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார். அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார். டெஸ்லாவின் பங்குகள் விலை உயர்வை சந்தித்து வருவதன் காரணமாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

எலான் மஸ்க் அனுப்பிய வெள்ளிப் பதக்கம்

எலான் மஸ்க் அனுப்பிய வெள்ளிப் பதக்கம்

உலகின் மிகப் பெரிய பணக்காரராக என்பதில் முதல் இடத்தை பிடித்த பிறகு, ஜெஃப் பெசோஸ்-க்கு எலான் மஸ்க் வெள்ளிப் பதக்கம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்., தற்போது 210 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல்

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியதை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், மின்னஞ்சலில் வெள்ளி பதக்கத்தையும், 2-வது என்ற நம்பர் வடிவ சிலையையும் எலான் மஸ்க் அவருக்கு அனுப்பி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Found Jeff Bezos tweets about old news of Amazon failure - Tesla Elon musk Responds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X