தீபாவளி : அமேசான் -பிளிப்கார்ட் வழங்கும் மெகா சேல்.!
தீபாவளியை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு பல சலுகைகளை அளிக்கின்றன, மேலும் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன
தீபாவளியை முன்னிட்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு பல சலுகைகளை அளிக்கின்றன, மேலும் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை பிளிப்கார்ட் தனது Big Diwali Sale விற்பனையைத் தொடங்குகிறது. அதன்பின் அமேசான் நிறுவனம் அக்டோபர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி அமேசான் தீபாவளி சேல்-ஐ தொடங்கிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சிறப்பு விற்பனை.

அமேசான் தீபாவளி சேல்:
அமேசான் தீபாவளி சேல் பொறுத்தவரை எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.மேலும் ஆப்பிள், சாம்சங், எல்ஜி, ஹெச்பி, டெல், டைட்டன், சியோமி, லெனோவா, ஒன்பிளஸ், போன்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன்கள்
அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 40சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பொருட்களுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அனைவரும் எதிர்பார்க்கும் டிவி லேப்டாப் போன்ற பொருட்களுக்கு 60சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளிப்கார்ட்:
பிளிப்கார்ட் தீபாவளியை முன்னிட்டு டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கூடுதலாக 10 சதவீதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

சாம்சங்:
பிளிப்கார்ட் தீபாவளியை முன்னிட்டு சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஜே3 ப்ரோஸ்மார்ட்போனை ரூ.6,990-க்கு வாங்க முடியும், இதன் முந்தைய விலை ரூ.8,490-ஆக இருந்தது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் சேல்:
அமேசான் விட பிளிப்கார்ட் நிறுவனத்தில் விற்பனை அதிகம் நடத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதகி அளவில்இந்த வலைதளத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications